👬அரசு ஊழியர் யார்?🧍♂️ (Govt Emplayees)
தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர்கள் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றது. இது இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (I.A.S) கடைநிலை ஊழியர் வரை பொருந்தும். ”Officer” என்பது அலுவலர் அதாவது அலுவல்களை செய்பவர் ஆவார். ”Minister’ என்பது செயலாற்றுப் பணியாளர், என பொருள்படும். ”அமைச்சு’ என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என பொருள். அதிகாரி என்றால் அரசு நிர்வாகத்தில் ஆனைகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அலுவலர் என பொருள். ஆக அனைத்தும் மக்களுக்கு பணி செய்யவே ஒழிய. அதிகாரி என அதிகாரம் செய்தல் சட்ட விரோதம் ஆகும். தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது.. 1. தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class) ...