நண்பர்கள் தினம்: 30.07.2021
அக நக நட்பது நட்பு அக நக நட்பது நட்பு: நண்பர்கள் தினம்! எல்லா நாட்களிலும் நாம் நமக்கு உதவுபவர்களுக்கும், சிறந்த அறிஞர்களுக்கும், சமூகத்துக்குத் தொண்டு செய்தவர்களுக்கும் நன்றி செலுத்திக் கொண்டு இருக்கிறோம். சிறந்த கருத்துகளையும் தத்துவங்களையும் போற்றிக் கொண்டு இருக்கிறோம். இருப்பினும், தேச அளவிலும், சர்வதேச அளவிலும் சில சிறப்பு தினங்கள் அனுசரிக்கப்படும் போது, அந்தக் கருத்துக்கு மேலும் முக்கியத்துவம் கிடைக்கிறது. அந்த வகையில் நண்பர்கள் தினம் மிக நெகிழ்ச்சியுடன் அனைவராலும் கொண்டாடப்படும் ஓர் நாளாகும். நம் வாழ்வில் நண்பர்களுக்கான இடம் மிகவும் முக்கியமானது, உன்னதமானது. தினம் தோறும் நாம் நட்பைப் பேணி வளர்க்கிறோம். நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள், அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு முன்னின்று, தேவையான உதவிகள் செய்து, கூடவே இருந்து மகிழ்கிறோம். ஆனாலும், நண்பர்கள் தினம் என்று ஒரு நாள் தேச அளவில், உலக அளவில் அனுசரிக்கப்படும் போது, உற்சாக உணர்வு தொத்திக் கொள்கிறது. எல்லா நண்பர்களாலும் எப்போதும் கூடவே இருக்க முடிவதில்லை. தங்கள் நட்பைக் கொண்டாட , “நண்பர்கள் தினம்” ஒரு வாய்ப்பாக அமைகிறது. நண்பர்கள் ...