இடுகைகள்

விளையாட்டு வீரர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்றார் U19 உலகக் கோப்பையை வென்ற உன்முக்த் சந்த்

படம்
  இந்தியாவுக்காக ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற கேப்டனான உன்முக்த் சந்த் தனது 28 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் உன்முக் சந்த் கடந்த 2012-ம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு தலைமை தாங்கி கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.  அந்த உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட உன்முக் சந்த், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 111 ரன்கள் விளாசி 226 ரன் இலக்கை சேஸ் செய்து இந்தியா வென்றது.  இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட உன்முக்த் சந்துக்கு இந்திய சீனியர் அணியில் கடைசி வரை இடம் கிடைக்கவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி, ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகளுக்காக விளையாடியும் பெரியளவில் ஜொலிக்கவில்லை. பின்பு 2017 இல் டெல்லி அணியிலிருந்து நீக்கப்பட்டார்.  பிறகு உத்தராகண்ட் அணியில் இணைந்து விளையாடினார். எனினும் அவரால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் எடுத்து கவனம் ஈர்க்க முடியவில்லை.  முதல் தர கிரிக்கெட்டில் 3379 ரன்கள் எடுத்த உன்முக்த் சந்த், 28 வயதில் இந்திய கிரிக்கெட்டி...

இந்திய விளையாட்டில் பவர் ஹவுஸ் ஹரியானா மாநிலம்?

படம்
            இந்திய விளையாட்டு வரலாற்றில் கடந்த பல தசாப்தங்களாக கோலோச்சி வருகின்றனர் ஹரியானா மாநில வீரர்கள். இந்தியாவின் அறிவிக்கப்படாத விளையாட்டு மையமாகவும் ஹரியானா திகழ்ந்து வருகிறது. இது எப்படி தொடங்கியது, அம்மக்கள் விளையாட்டில் ஏன் இவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளார்கள் என்பதை விரிவாக பார்ப்போம்.              டோக்கியோ ஒலிம்பிக் இந்தியாவுக்கு மறக்க முடியாத ஒலிம்பிக்காக மாறியிருக்கிறது. எந்த ஒலிம்பிக்கிலும் இல்லாத வகையில் இந்த முறை இந்தியாவில் இருந்து 127 விளையாட்டு வீரர்கள் வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, பாட்மிண்டன், குதிரையேற்றம், ஃபென்சிங், கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, பாய்மரம், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளுதூக்குதல் உள்ளிட்ட 18 வெவ்வேறு விளையாட்டுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினர். என்றாலும், இந்தியாவின் பதக்க கனவை நிறைவேற்றியது தனிநபர் என்ற முறையில் ஆறு பேர். பதக்கம் வென்ற ஆறு பேரில் இந்தியாவின் தங்கப் பதக்க ஏக்கத்தை தீர்த்த நீரஜ் சோப்ரா, வெள்ளி வென்ற ரவிக்குமார் தாஹியா, வெண்கலம் வென்ற பஜ்ரங்...

Tokyo Olympics | மல்யுத்தத்தில் வெள்ளி- ரவிக்குமார் தாஹியாவின் சாதனைப் பயணம் தொடங்கியது எப்போது?

படம்
மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற 5-வது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரவிக்குமார் தாஹியா மல்யுத்தத்திற்கு பெயர் போன ஹரியானா மாநிலத்தில் உள்ள நாஹ்ரி கிராமத்தில் 1997-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பிறந்தார் ரவவிகுமார் தாஹியா. இவரது தந்தை ராகேஷ் குமார், நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். 10 வயதில் இருந்து மல்யுத்த கோதாவில் பயிற்சி பெற்று வரும் ரவிக்குமாருக்கு நாஹ்ரியில் இருந்து தினமும் பால், பழம், பாதம் பருப்புகளை கொண்டு செல்வாராம் இவரது தந்தை. ஒருநாள் அல்ல இரு நாள் அல்ல ஏறத்தாழ 10 ஆண்டுகள் மகனுக்கான உணவை வீட்டில் மைதானத்திற்கு கொண்டு சென்றுள்ளார் இந்த பாசக்கார தந்தை. ரவிக்குமாரின் உடல் வலுவிற்கு தந்தையில் இந்த டயட் முறைதான் முக்கிய காரணம் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் சுஷில்குமார் வெள்ளி வென்றதை பார்த்து தானும் ஒருநாள் நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என ரவிக்குமார் முடிவு செய்தார். சுஷில் பயிற்சி செய்த சத்ரசால் மைதானத்தில் தான் இவரும் பயிற்சி மேற்கொண்டா 2015-ல் நடந்த ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 55 கிலோ பிரிவில் கலந்துகொண்...

ஹேமங் கமல் பதானி

படம்
  பெயர் : ஹேமங் கமல் பதானி பிறப்பு : 14-11-1976 இடம் : சென்னை வகித்த பதவி : கிரிக்கெட் வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு ஹேமங் கமல் பதானி ஓர் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் நான்கு தேர்வு கிரிக்கெட் போட்டிகளிலும், 40 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர். தமிழக கிரிக்கெட் வீரரான இவர் ரஞ்சி அணிக்கு தலைவராக இருந்துள்ளார்.  ஹேமங் பதானி   இந்தியா இவரைப் பற்றி துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம் பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு தரவுகள் தேர்வு ஒ.நா ஆட்டங்கள் 4 40 ஓட்டங்கள் 94 867 துடுப்பாட்ட சராசரி 15.66 33.34 100கள்/50கள் -/- 1/4 அதியுயர் புள்ளி 38 100 பந்துவீச்சுகள் 48 183 விக்கெட்டுகள் - 3 பந்துவீச்சு சராசரி - 49.66 5 விக்/இன்னிங்ஸ் - - 10 விக்/ஆட்டம் - n/a சிறந்த பந்துவீச்சு - 1/7 பிடிகள்/ஸ்டம்புகள் 6/- 13/-

ஜோஷ்னா சின்னப்பா

படம்
பெயர் : ஜோஷ்னா சின்னப்பா பிறப்பு : 15-09-1986 பெற்றோர் : அஞ்சன் சின்னப்பா, சுனிதா இடம் : சென்னை வகித்த பதவி : ஸ்குவாஷ் வீராங்கனை வரலாறு:-வாழ்க்கை வரலாறு ஜோஷ்னா சின்னப்பா 1986 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு இந்திய ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஆவார். வாழ்க்கைச் சுருக்கம்:  தமிழ்நாடு, சென்னையில் செப்டம்பர் 15, 1986 ஆம் ஆண்டு திரு. அஞ்சன் சின்னப்பா, சுனிதா சின்னப்பா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை முன்னால் ஸ்குவாஷ் வெற்றிவீரராவார், மேலும் தந்தை அஞ்சன் தமிழகத்தின் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும் உள்ளார். ஜோஷ்னா சின்னப்பா 2003 ஆம் ஆண்டின் பிரிட்டனில் உள்ள செபீல்ட்டில் நடைபெற்ற பிரிட்டீஷ் ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. சென்னை உள்ள இந்திய ஸ்குவாஷ் கலைக்கழகத்தில் பயிற்சிப் பெற்றவராவார், மே 2012 ஆம் ஆண்டு சென்னை திறந்தவெளி ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா 9-11, 11-4, 11-8, 12-10 என்ற புள்ளிக் கணக்கில் பிரிட்டனின் சாரா ஜானி பெர்ரியை வீழ்த்தினார். மேலும் ஜோஷ்னா தற்போது உலக தரவரிசையில் 25 வது இடத்தில் உள்ளார். மற...

சடகோபன் ரமேஷ் (SADAKOBAN RAMESH)

படம்
பெயர் : சடகோபன் ரமேஷ் பிறப்பு : 16-10-1975 இடம் : சென்னை வகித்த பதவி : கிரிக்கெட் வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு சடகோபன் ரமேஷ், இந்தியத் தேசிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர். சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 19 தேர்வு கிரிக்கெட் போட்டிகளிலும், 24 ஒருநாள் பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வு கிரிக்கெட் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2001 - 2007 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். 2005-2007 காலப்பகுதியில் கேரளா கிரிக்கெட் அணியிலும், 2007-2008 காலப்பகுதியில் அசாம் கிரிக்கெட் அணியிலும் இணைந்து விளையாடினார். தனது முதலாவது ஒருநாள் போட்டியில் முதலாவது பந்து வீச்சில் ஒரு இலக்கைக் கைப்பற்றிய ஒரே ஒரு இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இவர் கொண்டுள்ளார். இவர் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்த நிக்சன் மெக்லீன் உடையது. சடகோபன் ரமேஷ் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் மூத்த சகோதரனாக சஞ்சய் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரூபா தேவி (Rupa Devi)

படம்
 பெயர் : ரூபா தேவி பிறப்பு : 25-03-1989 பெற்றோர் : குருசாமி இடம் : திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு வகித்த பதவி : கால்பந்து விளையாட்டு வீரர் விருதுகள் : சக்தி விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு ரூபா தேவி, 25 மார்ச் 1989ல் பிறந்தார். தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக தனது விளையாட்டு வாழ்க்கையை துவக்கியவர். 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவின் நடுவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், தமிழகத்தில் இருந்து, ஃபிஃபா கால்பந்து நடுவராக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ரூபா தேவி பெற்றார். இதுவரை, ஃபிஃபா அமைப்பின் பெண் நடுவர்களாக இந்திய பெண்கள் ஐவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல்லில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ரூபா தேவியின் விளையாட்டு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செலவுகளையும் திண்டுக்கல் கால்பந்து அமைப்பு கவனித்துக் கொண்டது. பி.எஸ்.சி மற்றும் பி.எட். கல்வியை பூர்த்தி செய்துள்ள ரூபா தேவி, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘சக்தி விருது’, ரெயின் டிராப்ஸ் நிறு...

வாசுதேவன் பாஸ்கரன் (Vasudevan Baskaran)

படம்
  பெயர் : வாசுதேவன் பாஸ்கரன் பிறப்பு : 17-08-1950 பெற்றோர் : வாசுதேவன் , பத்மாவதி இடம் : ஆரணி , சென்னை , தமிழ்நாடு வகித்த பதவி : வளைத்தடி பந்தாட்ட வீரர் விருதுகள் : பத்மஶ்ரீ விருது , அர்ஜுனா விருது     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   வாசுதேவன் பாஸ்கரன் , பிறந்த ஊர் ஆரணி ஆகும் . இவரது தந்தை வாசுதேவன் மற்றும் தாய் பத்மாவதி ஆவர் . இவர் தமது படிப்பை வெஸ்லி பள்ளியிலும் , லயோலா கல்லூரியிலும் மேற்கொண்டார் .   வாசுதேவன் பாஸ்கரன் , ஒரு சிறந்த வளைத்தடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர் . இவர் மாஸ்கோவில் நடந்த 1980- ஒலிம்பிக் விளையாட்டில் இந்திய தேசிய அணியின் தலைவராக விளையாடினார் . இந்த அணி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது . 1979-1980 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதைப் பெற்றார் .   இவர் 11 வயதில் வளைத்தடிப் பந்தாட்டத்தை விளையாட ஆரம்பித்தார் . அகில இந்திய பள்ளி அணியில் இடம்பெற்றார் . கல்லூரி நாளில் பல்கலைக்கழக அணிக்காக ஆஸ்திரேலியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயணம் செய்த...

மாரியப்பன் தங்கவேல் (Mariappan Thangavel)

படம்
  பெயர் : மாரியப்பன் தங்கவேல் பிறப்பு : 28-06-1995 பெற்றோர் : தங்கவேல் , சரோஜா இடம் : வடகம்பட்டி , சேலம் மாவட்டம் , தமிழ்நாடு வகித்த பதவி : தடகள விளையாட்டு வீரர் விருதுகள் : பத்மஶ்ரீ விருது     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   இந்திய மாற்றுத்திறனாளர் . தடகள விளையாட்டு வீரர் ஆவார் . தமிழ்நாட்டு விளையாட்டு வீரரான இவர் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார் . இரியோ டி ஜெனீரோவில் நடந்த 2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி 42 வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் .   வாழ்க்கைக் குறிப்பு   மாரியப்பன் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர் . தனது ஐந்தாவது அகவையில் பள்ளி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் பேருந்து வலது காலில் ஏறி முழங்காலுக்குக் கீழே காலை இழந்தார் . காய்கனி விற்று வாழ்க்கை நடத்தும் அவரது அன்னை அவரது மருத்துவச் செலவிற்காக ரூ .3 இலட்சம் கடன் பெற்று அதனைத் திருப்புவதற்கு அல்லற்பட்டு வந்தார் . தனது க...

விஜய் அமிர்தராஜ் (Vijay Amirtharaj)

படம்
  பெயர் : விஜய் அமிர்தராஜ் பிறப்பு : 14-12-1953 பெற்றோர் : ரோபர்ட் அமிர்தராஜ் , மாகி அமிர்தராஜ் இடம் : சென்னை , தமிழ்நாடு வகித்த பதவி : டென்னிஸ் வீரர் விருதுகள் : பத்மஶ்ரீ     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   விஜய் அமிர்தராஜ் இந்தியாவில் உள்ள சென்னையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீரர் ஆவார் . இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு என்ற சிற்றூராகும் . இவரது தந்தை ரோபர்ட் அமிர்தராஜ் . தாயார் மாகி அமிர்தராஜ் . இருவரும் டென்னிஸ் வீரர்களாவர் .

சதீஷ் சிவலிங்கம் (Sathish Sivalingam)

படம்
  பெயர் : சதீஷ் சிவலிங்கம் பிறப்பு : 23-06-1992 பெற்றோர் : சிவலிங்கம், தெய்வானை இடம் : சத்துவாச்சாரி, வேலூர், தமிழ்நாடு வகித்த பதவி : பளுதூக்கும் வீரர் விருதுகள் : அர்ஜுனா விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு சதீஷ் சிவலிங்கம், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை சிவலிங்கம், தாய் தெய்வானை ஆவார்கள். இவர் நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் உள்ள அட்லஸ் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற சதீஷ் சிவலிங்கம், 2007ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்ந்து நாகராஜ் என்பவரிடம் பயிற்சி பெற்றார். இவர் ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2014 பொதுநல விளையாட்டுக்களில் பாரம் தூக்குதல் – ஆடவர் 77 கிலோ போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குனர் ஆவார். மத்திய அரசு இவருக்கு 2015-ல் அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது. தமிழகத்தில் இருந்து இந்த விருதை பெறும் 9-வது பளு தூக்குதல் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

மகேஷ் பூபதி (Mahesh Boopathi)

படம்
பெயர் : மகேஷ் பூபதி இயற்பெயர் : மகேஷ் சீனிவாஸ் பூபதி பிறப்பு : 07-06-1974 பெற்றோர் : கிருஷ்ணா பூபதி,மீரா இடம் : சென்னை, தமிழ்நாடு வகித்த பதவி : டென்னிஸ் வீரர் விருதுகள் : பத்மஶ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது, தாதா சாகேப் பால்கே விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு மகேஷ் சீனிவாஸ் பூபதி இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரராவார். இவர் சென்னையில் பிறந்தவர். 1995ம் ஆண்டிலிருந்து தொழில்முறையில் ஆடி வருகிறார். தற்போது இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார். 2009ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். 2012ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.

மரிய இருதயம் - கேரம் விளையாட்டு வீரர் (Mariya Irudayam)

படம்
  பெயர் : மரிய இருதயம் பிறப்பு : கி.பி.1956 பெற்றோர் : அந்தோணி சைமன்,ஆரோக்கியமேரி இடம் : சென்னை, தமிழ்நாடு வகித்த பதவி : கேரம் விளையாட்டு வீரர் விருதுகள் : அர்ஜுனா விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு மரிய இருதயம் இந்திய கேரம் விளையாட்டு வீரர் ஆவார். 1956-ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் 2 முறை உலக கேரம் விளையாட்டு போட்டியிலும், 9 முறை தேசிய கேரம் விளையாட்டுப் போட்டியிலும் வெற்றியாளராக வாகை சூடியவர். கேரம் விளையாட்டில் இவரது பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு 1997-ம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கான மிக உயரிய விருதான அர்ஜுனா விருதை வழங்கியுள்ளது. 2014-ம் ஆண்டு வரையிலான இந்திய வரலாற்றில், கேரம் விளையாட்டுக்காக அர்ஜுனா விருதைப் பெற்ற ஒரே விளையாட்டு வீரர். வாழ்க்கைச் சுருக்கம் : இவர் கேரம் விளையாடத் தொடங்கிய இரண்டாவது ஆண்டில், பள்ளி மாணவர்களில் சிறந்த விளையாட்டு வீரருக்கான பத்திரிக்கையாளர் சங்க விருது கிடைத்தது. 1991ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற உலக வாகையர் போட்டியில் முதல் முறையாக வாகையர் பட்டம் வென்றார். 1992இல் உலக வாகையர் பட்டம் வென்றதற்காகக் குருநாதன் டிராபி வழங்கி கௌர...

தீபிகா பள்ளிக்கல் (Dipika Pallikal)

படம்
  பெயர் : தீபிகா பள்ளிக்கல் இயற்பெயர் : தீபிகா ரெபக்கா பள்ளிக்கல் பிறப்பு : 21-09-1991 பெற்றோர் : சஞ்சீவ், சூசன்பள்ளிக்கல் இடம் : சென்னை, தமிழ்நாடு வகித்த பதவி : ஸ்குவாஷ் விருதுகள் : அர்ஜுனா விருது, பத்மஶ்ரீ வரலாறு:-வாழ்க்கை வரலாறு தீபிகா பள்ளிக்கல் ஒரு இந்திய ஸ்குவாஷ் விளையாட்டு வீ்ராங்கனை ஆவார். உலக மகளிர் ஸ்குவாஷ் போட்டி தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் வந்த முதல் இந்திய பெண் விளையாட்டு வீரர் ஆவார். இவர் 2011-ம் ஆண்டு 3 WISPA பட்டங்களைப் பெற்று தன் விளையாட்டு வாழ்வில் சிறந்த தரவரிசை இடமாக 13-ம் இடம் பெற்றார். அதன் பின்னர் 2012-ம் ஆண்டு அந்த தரவரிசை இடத்தையும் தாண்டி முதல் 10 இடத்திற்குள் வந்தார். வாழ்க்கைச் சுருக்கம் : தீபிகா பள்ளிக்கல் என்று அறியப்படும் தீபிகா ரெபக்கா பள்ளிக்கல் 21 செப்டம்பர் 1991-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சிரியன் கிறித்தவ பெற்றோருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். நவம்பர் 15, 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் தீபி்கா இருவரும் திருமண நிச்சயம் செய்து கொண்டனர். இவர் தனது முதல் பன்னாட்டு பந்தய விளையாட்டை லண்டனில் விளையாடினார். இதுவரை ஜெர்மன...

குற்றாலீசுவரன் (Kutraleeswaran)

படம்
  பெயர் : குற்றாலீசுவரன் இயற்பெயர் : குற்றால் இரமேசு பிறப்பு : 08-11-1981 பெற்றோர் : இரமேசு,சிவகாமி இடம் : ஈரோடு, தமிழ்நாடு வகித்த பதவி : நீச்சல் வீரர் விருதுகள் : அர்ஜுனா விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், மாரத்தான் என்னும் வகை நீச்சல் வீரர் ஆவார். இவர் 1994-ம் ஆண்டு, தன்னுடைய 13-ம் அகவையில் நீச்சல் அடித்து, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை புரிந்தார். அதே வருடம், இவர் நீச்சல் அடித்து, 6 கால்வாய்களைக் கடந்து மிகிர் சென் என்பவருடைய 5-கால்வாய்களை நீச்சலடித்துக் கடந்த சாதனையை முறியடித்தார். இவருடைய பெயர் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. 1996-ம் ஆண்டு குற்றாலீசுவரனுக்கு அர்ஜுனா விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இவரைப் பற்றிய ஒரு பாடம் தமிழ்நாட்டின் பாடபுத்தகத்திலும் இருந்தது. வாழ்க்கைச் சுருக்கம் : குற்றாலீசுவரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், இரமேசு என்பவருக்கும், சிவகாமிக்கும் மகனாக ஈரோடு மாநகரில் பிறந்தார். ஒரு மாதத்திலேயே இவருடைய குடும்பம் சென்னை நகருக்கு நகர்ந்தது. குற்றாலீஸ்வரன் தன்னுடைய படிப்பை கோபாலபுரத்தில் உள்ள ...

நாராயண் கார்த்திகேயன் (Narayan Karthikeyan)

படம்
பெயர் : நாராயண் கார்த்திகேயன் பிறப்பு : 14-01-1977 பெற்றோர் : ஜி. கார்த்திகேயன், ஷீலா நாயுடு இடம் : கோயம்புத்தூர், தமிழ் நாடு வகித்த பதவி : கார் பந்தய வீரர் விருதுகள் : பத்மஶ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது, தாதா சாகேப் பால்கே விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேர்ந்தவருமான இவர், உலக மோட்டார் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொண்ட முதல், மற்றும் ஒரே இந்தியர் ஆவார். இவர் தற்போதைய வருடத்திய எஃப் 1 போட்டிகளில் ஜோர்டான் அணியின் சார்பாக பங்கு கொண்டு வருகிறார். 2010-ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஶ்ரீ விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது.  வாழ்க்கைச் சுருக்கம் : நாராயண் கார்த்திகேயனின் தந்தை ஜி. கார்த்திகேயனும் ஒரு கார் பந்தய வீரராவார். தன் தந்தையின் பாதிப்பில் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆவல் இளமையிலேயே பெறப்பட்ட நாராயண், இந்திய ராலி பந்தயங்களில் பங்கு கொள்ளத் தொடங்கினார். ஶ்ரீபெரும்புதூரில் நடந்த முதல் போட்டியிலேயே முதல் மூன்று வீரர்களுள் ஒருவராக வெற்றி பெற்றார். அதன் பிறகு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அ...

ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Aswin)

படம்
  பெயர் : ரவிச்சந்திரன் அஸ்வின் பிறப்பு : 17-09-1986 பெற்றோர் : ரவிச்சந்திரன், சித்ரா இடம் : சென்னை, தமிழ்நாடு வகித்த பதவி : கிரிக்கெட் வீரர் விருதுகள் : அர்ஜுனா விருது, சர் கார்பீல்டு சொபர்ஸ் விருது, ஐசிசி தொடர் ஆட்டக்காரர் விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஆடுகிறார். இவரும், இலங்கையைச் சேர்ந்த அஜந்த மென்டிஸ் மட்டுமே தற்போது கேரம் பந்து(carrom ball) அல்லது சொடுக்கு பந்து எனப்படும் வகையான சுழற்பந்தை வீசும் திறன் கொண்டவர்கள். தன்னுடைய பந்து வீசும் முறைக்கு சொடுக்கு பந்து என்ற பதத்தை பயன்படுத்தியவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.  2011 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 61 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2011-ல், இந்தியத் தேசிய அணி உறுப்...

'இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் (Viswanathan Anand)

படம்
பெயர் : விஸ்வநாதன் ஆனந்த் பிறப்பு : 11-12-1969 பெற்றோர் : விஸ்வநாதன் அய்யர்,சுசீலா இடம் : மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா வகித்த பதவி : சதுரங்க விளையாட்டு வீரர் விருதுகள் : அர்ஜுனா விருது, பத்ம ஶ்ரீ, தேசிய குடிமகன், ராஜீவ்காந்தி கோல் ரத்னா, பத்ம பூஷன், புக் ஆஃப் தி இயர், சதுரங்க ஆஸ்கார் விருதுகள், சோவியத் லேண்ட் நேரு விருது. வரலாறு:-வாழ்க்கை வரலாறு ‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற சதுரங்க விளையாட்டு வெற்றி வீரர் ஆவார். பதினாறு வயதிலேயே, அதிவேகமாக சதுரங்கக் காய்களை நகர்த்தி ‘மின்னல் சிறுவன்’ என்று போற்றப்பட்டவர். மேலும், 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, ‘உலகின் அதிவேக சதுரங்க வீரர்’ என்ற சிறப்பு பட்டமும் பெற்றார். பதினான்கு வயதில், ‘இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்’, பதினைந்து வயதில் ‘அனைத்துலக மாஸ்டர் அந்தஸ்து’, பதினெட்டு வயதில் ‘உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம்’, ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ என வென்று சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை இமயம் தொடச் ச...