த. பிரகாசம்
பெயர் : த . பிரகாசம் பிறப்பு : 23-08-1872 இறப்பு : 20-05-1957 பெற்றோர் : வெங்கட நரசிம்மன் - சுப்பம்மாள் இடம் : ஐதராபாத் , ஆந்திரப் பிரதேசம் வகித்த பதவி : வழக்கறிஞர் , எழுத்தாளர் , அரசியல்வாதி விருதுகள் : ஆந்திர கேசரி வரலாறு :- வாழ்க்கை வரலாறு த . பிரகாசம் இந்திய சுதந்தர போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார் . இவர் ஆந்திர மாநிலம் உருவானபோது அதன் முதல் முதலமைச்சராகப் பணியாற்றினார் . பிறப்பும் படிப்பும் : பிரகாசம் 1872 ஆம் ஆண்டு தற்கால ஆந்திர மாநிலம் , ஒங்கோல் நகரத்தின் அருகேயுள்ள வினோத ராயுடு பாலம் என்ற கிராமத்தில் பிராமண ஜாதியில் பிறந்தார் . இவரது பெற்றோர் வெங்கட நரசிம்மன் மற்றும் சுப்பம்மாள் . சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் , சென்னையில் இரண்டாம் நிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார் . பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்றார் . சுதந்திர போராட்டத்தில் : 1907 ஆம் ஆண்டு வங்காள தேசியவாதி பிபின் ...