ஆர். கே. சண்முகம் (R.K.SHANMUGAM)
பெயர் : ஆர். கே. சண்முகம் பிறப்பு : 17-10-1892 இறப்பு : 03-05-1953 பெற்றோர் : ஆர். கந்தசாமி செட்டியார் , ஸ்ரீரங்கம்மாள் இடம் : கோயம்புத்தூர் புத்தகங்கள் : குற்றாலக் குறவஞ்சிக்கு உரை வகித்த பதவி : வழக்கறிஞர், அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர். இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் முதல் தமிழ் சபாநாயகர் ஆவார். 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர். நாட்டுப் பிரிவினை போது எழுந்த கணக்கு பிணக்குகளுக்கு சரியான முடிவு கண்டவர். வாழ்க்கைக் குறிப்பு: தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் பல தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான வாணிய செட்டிக் குடும்பத்தில் ஆர். கந்தசாமி செட்டியார் - ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சண்முகனாருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள். கோவை யூனியன் உயர...