ப்ரீபெய்ட் சிம் பயனர்களுக்கான மினிமம் ரீசார்ஜ் கட்டணத்தை மாற்றிய ஏர்டெல் : காரணம் என்ன?
உலக அளவில் கடல் கடந்து வசிப்பவர்களையும் நொடி பொழுதில் தொடர்பு கொள்ள உதவுகிறது தொலைத்தொடர்பு சாதனங்கள். அதில் மிக முக்கியமான பணியை செய்து வருவது டெலிகாம் நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் கொடுக்கின்ற சிம் கார்டுகளை வைத்துதான் நாம் அனைவரையும் தொடர்பு கொள்கிறோம். தற்போது இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ‘ஏர்டெல் இந்தியா’ தனது ப்ரீபெய்ட் கட்டண விவகாரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அந்த மாற்றங்கள் அந்நிறுவனத்தின் பயனர்களை வாட்டி வதைக்கும் நிலையில் உள்ளது. அது என்ன மாற்றம்? என்பதை பார்ப்பதற்கு முன்பாக இந்திய டெலிகாம் நிறுவனங்கள் குறித்து பார்ப்போம். இந்திய டெலிகாம் நிறுவனங்கள்! இந்தியாவை பொறுத்தவரை ஏர்டெல், ஜியோ, வி மாறும் BSNL (அரசு நிறுவனம்) என நான்கு டெலிகாம் நிறுவனங்கள் தற்போது உள்ளன. இதற்கு முன்னர் இருந்த சில நிறுவனங்கள் தொழில் போட்டி காரணமாக மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் தங்களது நிறுவனத்தை இணைத்து விட்டு சென்றுள்ளன. ஜியோவின் வருகை! ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனத்தின் என்ட்ரிக்கு பிறகு இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு புரட்சி பிறந்துள்ளது என்றே சொல்ல வேண்ட...