இடுகைகள்

காவல்துறை செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்நோக்கிய நல்ல செய்தி. நீதியரசர் அய்யா திரு கிருபாகன் அவர்களால் அளிக்கப்பட்ட காவல்துறையினருக்கான நல்ல செய்தி

படம்
  எதிர்நோக்கிய நல்ல செய்தி. நீதியரசர் அய்யா திரு கிருபாகன் அவர்களால் அளிக்கப்பட்ட காவல்துறையினருக்கான நல்ல செய்தி

தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக காவலர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணியிட மாற்றம்

படம்
  தென்காசி மாவட்டம், காவல்துறையில் ஓர் காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த நபர்களுக்கு பொது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு செய்யப்படும் பணியிட மாற்றத்தின் காரணத்தால் பல காவலர்கள் அவர்களது குடும்பத்தை பிரிந்து தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு பணிபுரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. காவலர்களின் இந்நிலையை அறிந்த *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கிருஷ்ணராஜ் IPS* அவர்கள் தென்காசி மாவட்டத்தில் முதல்முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட உள்ள காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளை இலத்தூரில் உள்ள பாரத் பெண்கள் கல்வியியல் கல்லூரிக்கு வரவழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் விருப்பப்படும் காவல் நிலையம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இச்செயலுக்கு காவலர்கள் அவர்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர். 

தன் உயிரை துச்சமென நினைத்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய காவலர் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

படம்
  தேனி மாவட்டம் 11.08.2021 குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டு எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்ய முயன்றவரை போடி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் 1035-திரு.S.சுரேஷ்  என்பவர் தன் உயிரை துச்சமென நினைத்து வீட்டின் கதவை உடைத்து அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார். யாரும் முன்வராத நிலையில் துரிதமாகவும், துணிவுடனும்  செயல்பட்டு வீட்டினுள் திறந்த நிலையில் இருந்த எரிவாயு சிலிண்டரை திறம்பட கையாண்டு  அப்பெண்ணின் உயிரை காப்பாற்றிய காவலரின் இச்செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இச்செயலானது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பாராட்டை பெற்று வருகிறது. 

Tamil Nadu Police – Cyber Crime Alert

படம்
*Subject* : Through matrimonial sites fraudster promises to marry the victim and extorts money in the name of gifts. *Nature of Information:*  Fraudster creates fake profiles on matrimonial websites posing as a professional, settled in a foreign country and target women who are looking for profiles from abroad. They establish trust and get close to the women, then propose marriage and cook up a story such as sending gifts and it was stopped at the airport by Customs officer and needs to be cleared and there is an urgent need of money and ask to transfer the amount in lakhs. *Tactics of Cyber Criminals:*  1) Fraudster creates fake profiles on matrimonial websites posing as software  professionals or doctors or marketing professionals, settled in a foreign country, and target women who are looking for profiles from abroad. 2) They establish trust and get close to the women through mails, online chats or at times by even through phone calls mainly through foreign telep...

டிஜிபிக்கு எதிராக ஸ்டாலினுக்குக் காவலர்கள் எழுதிய கடிதம்

படம்
நீங்கள் பேருந்தில் பயணம் செய்பவராக இருந்தால் அடிக்கடி பார்த்திருக்கலாம். ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில்கூட பேருந்து திடீரென நிற்கும். அதில் சில போலீஸ்காரர்கள் ஏறிக்கொள்வார்கள். டூயூட்டிக்குப் போகும்போதோ அல்லது டூயூட்டி முடிந்து வரும்போதோ பெண் காவலர்கள் உள்ளிட்ட ஆரம்பநிலை காவலர்கள் அரசுப் பேருந்துகளை இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல சென்னையிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும்கூட கைதியை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்துவதற்கு அரசுப் பேருந்துகளில் அழைத்துச் செல்வார்கள்.   ’இவங்களுக்குல்லாம் யாரும் டிக்கெட் கேட்க மாட்டாங்கப்பா’ என்று பேருந்தில் போலீஸாரைப் பார்த்ததும் சில கமென்ட்டுகள் எழும். அதேநேரம் பேருந்தின் பாதுகாப்புக்காக டூயூட்டி பார்க்கவில்லை என்றால்கூட... அந்தப் போலீஸார் பேருந்தில் ஏறிச்செல்லும் அந்த நிமிடங்களில் பேருந்துக்குள் இருப்பவர்களுக்கு, ‘நம்ம பஸ்ல போலீஸ் வருது’ என்ற பாதுகாப்பு உணர்வும், அத்துமீற நினைப்பவர்களுக்கு, ‘நம்ம பஸ்ஸில் போலீஸ் இருக்கு’ என்ற எச்சரிக்கை உணர்வும் இயல்பாகவே ஏற்படுவதுண்டு. இதுமாதிரியான நிலையில்தான்... “அரசுப் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும்...

தமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும் தெரியாததும்

படம்
தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198. தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் பரப்பளவு – 130058 ச.கி.மீ. மொத்த காவல் பணியாளர்கள் – 113602.. தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மண்டலங்கள் – 4. தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆணையரகம் – 6. தமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மாவட்டங்கள் – 33 (2 ரயில்வே உட்பட) தமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police)மேற...

பேருந்துகளில் பயணிக்கும் போலீஸார் கட்டாயம் டிக்கெட் எடுக்கவேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு*

படம்
அரசுப் பேருந்து நடத்துனருக்கும், காவலருக்கும் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் மாரடைப்பால் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணிக்கும் போலீஸார் டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சியிலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்தில் சீருடை அணியாமல் பயணம் செய்த காவலர் டிக்கெட் எடுக்காமல் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் நடத்துனர் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடத்துனருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. சிகிச்சை பலனளிக்காமல் நடத்துனர் உயிரிழந்ததால் விவகாரம் பெரிதானது. மனிதம் உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. பொதுவாக காவலர்கள் அரசுப்பேருந்தில் பணி நிமித்தமாக பயணம் செய்யும்போது டிக்கெட்டுக்கு பதில் வாரண்ட் உள்ளது என்று சொன்னால் அதை நடத்துனர் கணக்கில் எடுத்துக்கொள்வார். பின்னர் காவல்துறைக்கு அனுப்பப்படும் மொத்த ரசீது மூலம் பணம் வசூலிக்கப்படும். இதில்...

புகார் மனுக்களை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பெற வேண்டாம் உயர்நீதிமன்றம் உத்தரவு

படம்
*S.முருகேசன்*   *99 44 75 21 65* பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை உள்ளூர் காவல் நிலையங்களிலேயே முதலில் அளிக்க வேண்டும். புகார்களை நேரடியாக பெற வேண்டாம் என உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய சட்டப்படி தெளிவாக குற்றம் என அறியக்கூடிய வகையில் சில குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை செய்தவர்களை பிடி ஆணை (வாரன்ட்) இல்லாமல் போலீஸாரால் கைது செய்ய முடியும். அத்தகைய உடனடியாக நடவடிக்கை எடுக்கத்தக்க குற்றங்கள் (Cognizable offence) தொடர்பான புகார்களில் புகார் மனுவை பெறும் காவல் துறை அதிகாரி உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் ஒரு வழக்கில் 11 நாள்கள் காலதாமதமாக வழக்கு பதிவு செய்துள்ளதை நீதிபதி கண்டித்துள்ளார். குற்ற வழக்கில் முன் ஜாமீன் கோரி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.நாகமுத்து, அந்த நபருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதே நேரத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை யார் பெற வேண்டும் என்பது தொடர்பாக விரிவான அறிவுரைகளை அந்த உத்தர...

EX-டி.ஜி.பி திரிபாதி: கண்ணீர் மல்க வழியனுப்பிய காவல்துறை அதிகாரிகள்

படம்
  தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவராக பதவி வகித்தவர் திரிபாதி. 2019 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி முதல் இன்று வரை 2 ஆண்டுகள் பதவிவகித்தார். தமிழ்நாட்டின், 29 வது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர் ஜே.கே.திரிபாதி.  30 வது டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து ஜே.கே.திரிபாதி விடைபெற்றார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற திரிபாதி, தமிழக கேடரில் 1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியவர். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சியிலும் அதன்பின் சென்னைக்கும் மாற்றம் செய்யப்பட்ட இவர், தென்சென்னை இணை ஆணையராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் நிர்வாகப் பிரிவு, தென்மண்டல ஐஜி, ஆயுதப்படை, குற்றப்பிரிவு ஐஜி, பொருளாதாரக் குற்றப்பிரிவு, காவல்துறை தலைமையிடம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எனக் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் திறம்பட பணியாற்றி தனி முத்திரை பதித்துள்ளார். இதனையடுத்து ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையராக ...

தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும். – புதிய டிஜிபி Dr.சைலேந்திர பாபு IPS

படம்
தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும். – புதிய டிஜிபி சைலேந்திர பாபு   47சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. காவல்துறையினர்  மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும். – புதிய டிஜிபி சைலேந்திர பாபு   தமிழ்நாட்டில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் சில நாட்களாக நடந்து வந்தது. டிஜிபி பதவியை கைபற்ற கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், அது தொடர்பான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியது. இந்நிலையில், யுபிஎஸ்சியிலிருந்து வந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவித்தது. புதிய டிஜிபியாக பதவியேற்றுக்கொண்ட சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து கூறினார் திரிபாதி. விடைபெற்ற முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பி வைக்கப்பட்டது. சைலேந்திரபாபு ஐபிஎஸ் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் 1962-ம் ஆண்டு ஜூன் மாதம் 5- ம் தேதி சைலேந்திர...

தமிழ்நாடு காவல்துறை படிவங்கள் - Tamil Nadu Police Official Important Forms

படம்
உங்களுக்கு தேவையான படிவத்தைக் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள் NEW HEALTH INSURANCE FORM 2016 POLICE DEATH AFTER COMPARATIVE GROUND BENEFITS GO  - (GUIDELINES)

ஆன்லைன் மோசடி புகாரளிக்க ‘155260’ உதவி எண் வெளியீடு: சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் தகவல்

படம்
ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க 155260 என்ற உதவி எண் தொடங்கப்பட்டு 2 மாதத்தில் ரூ. 1.85 கோடி ரூபாய். முறைகேடுகளில் சிக்காமல் காப்பாற்றப்பட்டதாக சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.* ✍️ அனைத்து முக்கிய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகின்றன. பாதுகாப்பான டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது தற்போது கேள்விக்குறியாகி வருகிறது. *✍️டிஜிட்டல் பரிவர்த்தனையில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கூட பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. பாதுகாப்பான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை உறுதி செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தற்போது சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது.* ✍️அதன்படி, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, ஆன்லைன் மோசடிகள் மூலம் இழந்தவர்கள் புகாரளிக்க தேசிய உதவி எண் ‘155260’ அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதியன்று சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்த உதவி எண் வசதியை, ரிசர்வ் வங்கி, அனைத்து முக்கிய வங்கிகள், கட்டண வங்கிகள...

தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்

படம்
தென்காசி மாவட்டத்திற்கு புதிதாக காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், இதில் *காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ்* அவர்கள் வள்ளியூர் காவல் நிலையத்திலிருந்து *ஊத்துமலை* காவல் நிலையத்திற்கும், *திருமதி. ரோஸ்லின் சேவியோ* அவர்கள் தூத்துக்குடி PEW ல் இருந்து *தென்காசி ACTU* க்கும், *திரு. பட்டாணி* அவர்கள் நித்திரவிளை காவல் நிலையத்திலிருந்து *சங்கரன்கோவில் குற்றப்பிரிவிற்க்கும்*, *திரு. மனோகரன்* அவர்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து *சிவகிரி* காவல் நிலையத்திற்கும், *திருமதி. சரஸ்வதி* அவர்கள் CCPS காவல் நிலையத்தில் இருந்து *தென்காசி அனைத்து மகளிர்* காவல் நிலையத்திற்கும்,  *திருமதி மாரீஸ்வரி* அவர்கள் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்திலிருந்து *சங்கரன்கோவில் அனைத்து மகளிர்* காவல் நிலையத்திற்கு *திரு. சுரேஷ் அவர்கள்* வடமதுரை காவல் நிலையத்திலிருந்து *சுரண்டை* காவல் நிலையத்திற்கும், *திரு. மார்ட்டின்* அவர்கள் திருநெல்வேலி ஆயுதப்படை மோட்டார் பிரிவிலிருந்து *தென்காசி ஆயுதப்படைக்கும்*, *திரு.சந்தனகுமார்* அவர்கள் திருநெல்வேலி நகர் ஆயுதப் படையில் இருந்து *சங்கரன்கோவில் போக்குவரத்து* காவல் நி...

15 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் வழங்கப்பட்டது

படம்
15 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் வழங்கப்பட்டது தென்காசி மாவட்டம், கடந்த 2019-2020 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு காவல்துறையின் சேமநல நிதியிலிருந்து கல்வி உதவித்தொகையை *காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள்* வழங்கினார், இதில் கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 10,000 ரூபாயும், பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 18,000 ரூபாயும் வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில் காவல்துறையில் பணிபுரியும் உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படும் படி நடந்துகொண்டு உயர் பதவியை அடைய வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். உதவி தொகை பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

மக்களை தேடி தென்காசி காவல்துறை

 தென்காசி "மக்களை தேடி தென்காசி காவல்துறை " தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பேட்டி..!!! "மக்களை தேடி தென்காசி காவல்துறை" தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பேட்டி..!!! தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் IPS பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அவர், தென்காசி மாவட்டத்தில் புதிதாக மக்களை தேடி காவல்துறை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- கொரோனா ஊரடங்கால் புகார்கள் குறித்து மக்கள் காவல் நிலையத்துக்கு வந்து வெகுநேரம் பேச முடியாது. அதனால் மக்களை தேடி காவல்துறை என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துகிறோம். இத்திட்டத்தின் படி, புகார் கொடுத்தவுடன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் எழுத்தர் நேரடியாக புகார்தாரரின் வீட்டுக்கே சென்று விசாரிப்பார்கள். இது தொடர்பாக உடனடியாக அங்கு வைத்தே சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு அதற்கான எண்ணும் வழங்கப்படும். மேலும், புகார்கள் குறித்து காவல் நிலையங்களில் சரியான முடிவு எடுக்காவிட்டால் அல்லது போலீஸ்காரர்கள் சரியான பதில் அளிக்காவிட்டால் மக்க...

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் அவர்களுக்கு பிரிவு உபசார விழா

படம்
  தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் அவர்களுக்கு பிரிவு உபசார விழா சிறப்பாக நடைபெற்றது…

New SP Reported in Tenkasi District

படம்
  தென்காசி மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு தென்காசி மாவட்டத்தில் முதல் காவல் கண்காணிப்பாளராக திரு. சுகுண சிங் IPS அவர்கள் பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. R.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் இன்று (08.06.2021) பதவி ஏற்றுக்கொண்டார். நமது காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர், இவர் 2015 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து, காஞ்சிபுரம் மற்றும் தேவகோட்டை உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளர்(ASP) ஆகவும். பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர் காவல் துறையில் சென்னை வடக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர்(DCP) ஆகவும், திருவல்லிக்கேணி மற்றும் மாதாவரத்தில் காவல் துணை ஆணையராகவும்(DCP) பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் மக்களின்  குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் செயப்படும் 9385678039 என்ற தொடர்பு அறிமுகப்படுத்தியுள்ளார். ஊரடங்கு காலம் என்பதால் மக்கள...