சுவாமி விவேகானந்தர் (SWAMY VIVEKANANDAR)
பெயர் : சுவாமி விவேகானந்தர் பிறப்பு : 12-01-1863 பெற்றோர் : விசுவநாத் தத்தா, புவனேஸ்வரி தேவி இடம் : கல்கத்தா வகித்த பதவி : ஆன்மிகவாதி வரலாறு:-சுவாமி விவேகானந்தர்..!! 👳 நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நாம் படிக்கும்போது, அந்த தலைவர்கள் அத்தனை பேருக்கும் பின்னணியில் ஒரு உண்மையான உந்து சக்தியாக இருந்தவர் யார் என்றால், அவர் வேறு யாருமில்லை - சுவாமி விவேகானந்தர்தான். 👳 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த சமய தலைவர்களுள் ஒருவர். நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்து சமயத்தை வளர்த்தவர். 👳 சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்கியவர். இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்' மற்றும் ஸ்ரீ 'ராமகிருஷ்ண மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். 👳 சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் அவதாரம...