சுப்பிரமணிய சிவா
பெயர் : சுப்பிரமணிய சிவா இயற்பெயர் : சுப்பராமன் பிறப்பு : 04-10-1884 இறப்பு : 23-07-1925 பெற்றோர் : ராஜம் ஐயர்,நாகம்மாள்(நாகலட்சுமி) இடம் : வத்தலகுண்டு, திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா புத்தகங்கள் : மோட்ச சாதனை ரகசியம், ஶ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம், அருள் மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம், ஞானாம்ருதமென்னும் பிரஹ்மானந்த சம்பாஷணை, சச்சிதானந்த சிவம், பகவத்கீதா சங்கிலகம், சங்கர விஜயம், ராமானுஜ விஜயம், சிவாஜி (நாடகம்), தேசிங்குராஜன் (நாடகம்), நளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல் வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு இவர் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்திரிகையாளர். 1913-இல் ‘ஞானபாநு’ இதழை நடத்தியவர். விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர். ‘வீரமுரசு’ எனப் புகழ்பெற்றவர் இவர் திண்டுக்கல் மா...