நாகேஷ் (NAGESH)
பெயர் : நாகேஷ் இயற்பெயர் : நாகேஸ்வரன் பிறப்பு : 27-09-1933 இறப்பு : 31-01-2009 பெற்றோர் : கிருஷ்ணாராவ், ருக்மணி இடம் : தாராபுரம் வகித்த பதவி : நடிகர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு நாகேஷ் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர். வாழ்க்கைச் சுருக்கம் : நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப்பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம்பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார். தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தான் அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புக...