இடுகைகள்

தமிழ்நாட்டு அரசர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராமச்சந்திர நாயக்கர்

படம்
பெயர் : ராமச்சந்திர நாயக்கர் இடம் : சேந்தமங்கலம், நாமக்கல் வகித்த பதவி : விடுதலை போராட்ட வீரர், படைத் தளபதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு கொங்கு நாடு என்று சொல்லப்படும் சேலம், நாமக்கல் பகுதியில் உள்ள சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு பாளையத்தை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆண்டு வந்தவர் ராமச்சந்திர நாயக்கர். கொங்கு நாடு பகுதியில் இருந்த பாளையங்களில் பெரியதாகவும், வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் சேந்தமங்கலம் பாளையம் இருந்து வந்துள்ளது. கொங்கு நாட்டில் 17ம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களின் ஆளூமை 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது. விசுவநாத நாயக்கரால் பாளைய முறையை ஏற்படுத்தி அதன்படி தென்தமிழகம், கொங்கு நாடு பகுதிகளில் பாளையங்களை பிரித்து குறுநில மன்னர்களாக பாளையக்காரர்கள் நியமிக்கபட்டுள்ளனர். பெரும்பாலான பாளையங்கள் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் இனத்தவர்களாலே ஆளப்பட்டுள்ளது. அவ்வாறாக இருந்த கம்பளத்து பாளையத்தில் சேந்தமங்கலமும் ஒன்று. இப்பகுதியை ராமச்சந்திர நாயக்கர் ஆங்கில ஆட்சி நடைபெறும் வரையில் ஆட்சி செய்துள்ளார். அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்தாலும், திப்பு சுல்தானுக்கு உதவியதாலும் இப்பாளையத்தை ஆ...

வாண்டாயத் தேவன் (VANADAYA THEVAN)

படம்
  பெயர் : வாண்டாயத் தேவன் இடம் : சிவகங்கை , இராமநாதபுரம் , தமிழ்நாடு வகித்த பதவி : அரசர் , விடுதலைப் போராட்ட வீரர்     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   கொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன் . ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில் , நெல்கட்டுஞ்செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார் .   முதற்போர் :   இவர் பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள் . ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது . அந்த படையை மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயிண்டர் போன்ற பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர் . 1766 ல் நெல்லையிலிருந்து வந்த அந்த இரண்டு தளபதிகளின் படைகளை வாண்டாயத் தேவன் எதிர்த்து நடத்திய போரை வரலாற்றாளர்கள் முரட்டுத்தனமான போர் என்று கூறுகின்றனர் . பரங்கிப்படை அப்படி ஒரு தாக்குதலை அதுவரை கண்டதில்லை எனக் கூறப...

வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandia Kattabomman)

படம்
  பெயர் : வீரபாண்டிய கட்டபொம்மன் இயற்பெயர் : வீரபாண்டியன் பிறப்பு : 03-01-1760 இறப்பு : 16-10-1799 பெற்றோர் : ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் இடம் : பாஞ்சாலங்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர். வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படுபவர். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள். பிறப்பு: பொம்மு மற்றும் ஆதி கட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியர். ஜெகவீர கட்டபொம்ம...

நெல்லை அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

படம்
                             நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ராமசாமி கோவிலில் பழமையான கல்வெட்டு இருப்பதாக திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் மைய இயக்குனர் மாரியப்பன் சேரன்மகாதேவி தமிழ்ப்பேரவை செயலாளர் பாலு மற்றும் மைய நிர்வாகிகள் ராஜேந்திரன்  நந்தினி அனுஷா தங்கம் சூர்யா ஆகியோர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கல்வெட்டு கூடுதல் ஆய்வுக்காக மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் சாந்தலிங்கத்திற்கு அனுப்பப்பட்டது இதில் கல்வெட்டில் உள்ள வாசகம் விவரங்கள் கிடைத்துள்ளன. இக்கோவில் பாண்டிய மன்னனான பராந்தக வீரநாராயணனால் ( 863-904)  கட்டப்பட்டது. கோவிலுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் சோழர் காலத்தில் வெட்டுவிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. கல்வெட்டு கோவில் கருவறை அதிட்டானத்தில் உருளை வடிவ கல்லில் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டு ராசராச சோழன் சோழ மன்னனின் மகன் ராசேந்திர சோழன் ( 1012-1044) மூன்றாவது ஆட்சி ஆண்டு காலத்தில் அதாவது 1015-ம் ஆண்டில் வெட்டப் பட்டது. இதன...

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

படம்
 தன் நாட்டு எல்லையில் எதிரியின் தொல்லை அதிகம் இருந்ததால், அரசன் தன்னுடைய மகனிடம் எதிரியிடம் போர் புரியச் சொல்லி  உத்தரவிடுகிறார்.  தந்தையின் உத்தரவை மதித்து இளவரசன் தன் நாட்டு படைகளுடன் எதிரி நாட்டை நோக்கி பயணப்படுகிறான்.  படைகள் பயணித்து, தன்னுடைய சொந்த நகரை விட்டு நகர்ந்து  எதிரியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.  நகர்ந்து கொண்டே சென்ற அந்த படை, ஒரு நாள் நகருக்கு வெளியே ஒரு இடத்தில் முகாமிட்டு தங்குகின்றது. போருக்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதால் முகாமில் தங்கியிருந்த படை வீரர்களிடம் வேறு ஒரு பணியைச் செய்யச் சொல்லி உத்தரவிடுகிறான் அந்த  இளவரசன்,  காவிரியில் வெள்ளம் வரும் காலங்களில் அந்த நீர் வீணாக சென்று கடலில் கலக்கின்றதே என்று வருந்திய இளவரசன், அந்த நீரை சேமிக்க எண்ணி அந்த படை வீரர்களிடம் ஒரு பெரிய ஏரியை அங்கு வெட்டச் சொல்லி உத்தரவிடுகிறான். இளவரசனின் உத்தரவை ஏற்று படை வீரர்கள்  மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும்  சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு பெரிய ஏரியை பல மாதங்களாக உயிரை கொடுத்து அந்த படை வீரர்கள் வெட்டி முடிக்கிறார்கள்.....