இடுகைகள்

நடப்பு நிகழ்வுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி..! முன்னாள் வீரரின் தரமான தேர்வு

படம்
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர்  17 தொடங்கி நவம்பர் 14 வரை நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி உட்பட அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவருகின்றன. இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வெல்லவில்லை என்ற தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. இந்திய அணி வெல்வதற்கு அணி தேர்வு மிக முக்கியம். அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதி தேர்வு செய்துள்ளார். அதன்படி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாகவும் ஷிகர் தவானை மாற்று தொடக்க வீரராகவும் தேர்வு செய்துள்ளார் சோதி. விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்) ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும், ஸ்பின்னர்களாக சாஹல், ராகுல் சாஹர் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகிய நால்வரையும் தேர்வு செய்துள்ளார் ரிதீ...

ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனைக்கு நடவடிக்கை: வேளாண் அமைச்சர்

படம்
  ரேஷன் கடைகளில் பனை பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கப்படும். உள்ளூர் விவசாய தொழில்நுட்பம், இயந்திரங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கப்படும். விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு அமைக்கப்படும். ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு; இதன்மூலம் கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் விலையாக பெறுவர். விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்

படம்
  தமிழ்நாட்டு க்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும். சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 30 நடமாடும் காய்கறி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் அல்லது 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய 2 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை. கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி போன்ற சிறப்பு விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் அதற்கென ...

ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் - விரைவில் TET தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணி!

படம்
  தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை பள்ளி கல்வி துறை மேற்கொண்டு வருகிறது. ஆசிரியர்கள் நியமனம் :  தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியதை அடுத்து கடந்த ஜூன் 14ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளமையால் முதற்கட்டமாக 9 முதல் 12 ம் வகுப்பு வரைந்த பள்ளிகள் திறப்பு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகை கட்டாயமாக்கப்பட்டு பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 1 ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை மாணவர்கள் விகித அடிப்படையில் கணகெடுத்து அதை எம்மிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் பொன்னையா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்...

ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் 12-ந்தேதி விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

படம்
             கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு ( இஸ்ரோ ) ஏற்பட்டது . குறிப்பாக நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி 28- ந்தேதி ‘ பி . எஸ் . எல் . வி . சி -51’ ராக்கெட் மட்டும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது .   இதில் பொருத்தப்பட்டிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த ‘ அமேசோனியா ’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும் அதனுடன் 18 செயற்கைகோள்கள் விண்ணில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது . இதனைத்தொடர்ந்து தற்போது நடப்பு ஆண்டுக்கான 2- வது ராக்கெட்டான ஜி . எஸ் . எல் . வி . ரக ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ தயாராகி வருகிறது .   இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது :-   “ இயற்கை பேரழிவுகள் , விவசாயம் , வனவியல் , கனிமவியல் , பேரிடர் எச்சரிக்கை , பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ‘ ...

பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அடுத்த அதிரடி!வருகிறது முக்கிய மாற்றம்..போலி ஆவணப்பதிவுக்கு செக்

படம்
  சென்னை போலி ஆவண பதிவுகளை தடுக்கும் நோக்கில் ஆவணங்களை எழுதி கொடுப்பவர் மற்றும் எழுதி பெறுபவர் புகைப்படம், இடது பெருவிரல் ரேகையினை பெறுவது கட்டாயமக்கப்பட்டது. ஆவணத்தை எழுதி கொடுத்தவரை அடையாளம் காட்டும் சாட்சிய நபரின் பெயர், தந்தை பெயர், முகவரி ஆகிய கூடுதல் விவரங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பத்திர எழுத்தர்கள் அல்லது, பத்திரம் எழுதும் வழக்கறிஞர்கள் புகைப்படம் இனி கட்டாயம் இடம் பெற வேண்டும். அவர்களின் உரிமம் எண், கையொப்பமும் இருக்க வேண்டும். அதை எழுதி வாங்குபவர்களின் புகைப்படமும் கடடாயம் இடம் பெற வேண்டும் எனறு ஐஜி சிவன் அருள் கூறியுள்ளார். இதன் மூலம் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்வது தடுக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது. பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள், பத்திரபதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஒரு சொத்து பதிவு செய்யப்படும் போது, அந்த பகுதிகளில் உள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் தான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் பத்திரப்பதிவுக்கு சந்தை மதிப்பு கவனத்தில் கொள்ளப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பதிவு ...

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூ: பொதுமக்கள் மகிழ்ச்சி

படம்
  கம்பம் :12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சிப்பூ தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டம் சாத்தாம்பாறை கிராமப் பஞ்சாயத்து மலைப்பகுதிகளில் பூத்துள்ளது . பொதுமக்கள் இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர் .   கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை கிராமப்பஞ்சாயத்து பகுதியில் சோழா தேசிய பூங்கா உள்ளது . இங்கு கிழக்கத்தி மலா என்றழைக்கப்படும் மலையில் 10 ஹெக்டேர் நிலப் பரப்பளவில் வனப்பகுதியில் நீல குறிஞ்சிப் பூ பூத்துள்ளது .   இந்தப் பூ 30 முதல் 60 சென்டிமீட்டர் உயரம் வளர்ந்துள்ளது . 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் இந்தப் பூ உலக அளவில் 450 வகை பூக்கள் உள்ளது . இந்தியாவில் மட்டும் 146 வகையான குறிஞ்சிப் பூக்களின் கேரள மாநிலத்தில் மட்டும் 43 வகைகள் கண்டறியப்பட்டுள்ளது .   ஸ்ட்ரோபிளன்தீஸ் குந்தியானா என தாவர வகை பெயர் கொண்ட இந்த பூ உள்ளூரில் நீல குறிஞ்சி பூ என இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர் .   கடந்த 2018 ஆம் ஆண்டு மூணாறு ஆனைமலை தொடரில் உள்ள இரவிகுளம் தேச...

சிங்கப்பூரில் பெரும் சிக்கலில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்... சமூக - அரசியல் பின்புலம் என்ன?

படம்
சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக நிலவும் போக்கு, மிகப் பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதன் பின்புலம் குறித்து சற்றே விரிவாக காணலாம். ஆசியாவின் நிதி மையமாக கடந்த தசாப்தங்களில் பெரும் வளர்ச்சியை கண்டு வந்தது சிங்கப்பூர். இந்த வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்தது, வெளிநாட்டு தொழிலாளர்கள். பொருளாதாரத்தில் சிங்கப்பூர் பெற்றுள்ள வெற்றிக்கு உலகளாவிய தொழிலாளர்களின் மிகப்பெரிய உழைப்பே காரணம். ஆனால், தற்போது வெளிநாட்டு தொழிலாளர்களை முன்வைத்து சிங்கப்பூரில் எழுந்துள்ள அரசியல் பிரச்னைகள் சர்வதேச கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பிரச்னைகள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இதற்கு விதை போட்டது சமீபத்திய ஆய்வு ஒன்று. சிங்கப்பூரில் உள்ள 'கொள்கை ஆய்வு மையம்' எடுத்த அந்த ஆய்வில் சிங்கப்பூரின் பூர்வகுடிகள் 70% பேர், வெளிநாட்டு தொழிலாளர்களால் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என்றும், அதனால் வருங்காலங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியமர்த்தலில் கடுமையான வரம்புகளைக் கொண்டு வரவேண்டும் என்றும் கோரியுள்ளனர். 43.6% பேர் வெளிநாட்டவர்களின் க...

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் திருச்சி கார்பைன் புதிய ரக துப்பாக்கி அறிமுகம்

படம்
திருச்சி மாவட்டம் நவல்பட்டில் உள்ள படைகலன்  தொழிற்சாலையில் திருச்சி கார்பைன் என்ற  புதிய ரக துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவானது இன்று படைகலன் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது. அப்போது அதன் பொது மேலாளர் சஞ்சய் திவேதி, திருச்சி கார்பைன் துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார். இந்த புதிய ரக துப்பாக்கியானது படைக்கலன் தொழிற்சாலையில்  உருவாக்கப்பட்டது. இது சிறிய மற்றும் இலகு ரக ஆயுதமாகும். இதனை போர் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், பராட்ரூப்பர்கள், காவல்துறை, விமான நிலையங்கள் மற்றும் சிறப்பு செயல்பாட்டு படை வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள (special muzzle booster)சிறப்பு முகவாய் பூஸ்டர் மூலம், துப்பாக்கி சூட்டின் போது எழும் ஒளி மற்றும் சத்தத்தை குறைக்கிறது. இங்கு துப்பாக்கியில் அசால்ட் ரைபிளின் வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தலாம். இதேபோல் அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே47ன் உதிரிபாகங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். திருச்சி கார்பன் புதிய ரக  துப்பாக்கியை பாதுகாப்பு வீரர்களின் கவச உடைக்குள் மறைத்து வைத்து பயன்படுத்த ஏதுவாக அமைக்கப்பட்...

சூப்பர் செய்தி அகவிலைப்படி 28 %-லிருந்து 31%ஆக உயரும்

படம்
 1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி செப்டம்பர் மாத இறுதியில் வரும் சம்பளத்தில் சேர்க்கப்படும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், மூன்று டி.ஏ. தவணைகளும் இந்த சம்பளத்தில் வழங்கப்படும். ஊழியர்களுக்கான நல்ல செய்தி இதோடு முடியவில்லை. அகவிலைப்படி மீண்டும் ஒரு முறை அதிகரிக்கப்படலாம். ஜூன் மாதத்திற்கான 3% டிஏ அதிகரிப்பு ஜூன் 2021 க்கான அகவிலைப்படி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 2021 ஜனவரி முதல் மே வரையிலான AICPI தரவுகளிலிருந்து 3% அகவிலைப்படி மேலும் அதிகரிக்கப்படும் என்பது தெளிவாகிறது. இது விரைவில் அறிவிக்கப்படும் என்று ஜேசிஎம் செயலாளர் (பணியாளர்கள் பக்கம்) சிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இருப்பினும், அது எப்போது செலுத்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 3 சதவீதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும். ஆகையால் ஊழியர்களின் ஊதியம் மீண்டும் ஒரு முறை அதிகரிக்கும் என்பது உறுதி. 2020 ஜனவரியில், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. பின்னர் 2020 ஜூன் மாதத்தில் 3 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்...

கோழி கழிவுகளில் இருந்து டீசல் உற்பத்தி

படம்
  கோழி கழிவுகளில் இருந்து டீசல் உற்பத்தி; கேரள கால்நடை மருத்துவரின் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கேரளாவின் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவுக்கு அருகே உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஜான் ஆபிரகாம். இவர் கோழி கழிவுகள் மற்றும் இறந்த பறவைகளில் இருந்து பயோடீசலை உருவாக்கி உள்ளார். நாமக்கல்லில் உள்ள தமிழக அரசின் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 2009-12-ம் ஆண்டு காலகட்டத்தில் ேமற்கொண்ட ஆய்வுப்படிப்பின்போது இந்த ஆராய்ச்சியை அவர் மேற்கொண்டார்.2014-ம் ஆண்டு இந்த ஆய்வை வெற்றிகரமாக முடித்த அவர் இதற்கான காப்புரிமைக்காக விண்ணப்பித்து இருந்தார். அதை ஆய்வு செய்த இந்திய காப்புரிமை அலுவலகம் தற்போது அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்து காப்புரிமை வழங்கி இருக்கிறது. சுமார் 7½ ஆண்டுகால நீண்ட போராட்டத்துக்குப்பின் இந்த அங்கீகாரத்தை பெற்றிருக்கும் ஜான் ஆபிரகாம், இந்த டீசலில் இயங்கும் வாகனங்களால் காற்று மாசுபாடு மிகவும் குறையும் என தெரிவித்து உள்ளார். இவர் தயாரித்த ஒரு லிட்டர் பயோடீசல் 38 கி.மீ. வரை மைலேஜ் அளிப்பதாக அவர் தெரிவித்தார். தற்போதைய டீசல் விலையில் 40 சதவீத செல...

பொறியியல் பட்டபடிப்புகளுக்கான விண்ணப்பம் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம்.

படம்
  பொறியியல், பி.டெக் படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு சென்னை: பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்றுள்ள சுமார் 500 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை www.tneaonline.org, அல்லது www.tndte.gov.in என்ற இணைய தளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம். கடந்த வாரம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பின் போது, பொறியியல் கல்லூரிக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வந்த பிறகு தான் இளநிலை பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தார். ...

தென்காசி புதிய கலெக்டராக கோபாலா சுந்தரராஜ் நியமனம்

படம்
  முக்கிய தகவல் தென்காசி மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டு இன்னும் பணியில் சேராத சந்திரகலா சற்றுமுன்  பணியிடமாற்றம்  தென்காசி புதிய கலெக்டராக கோபாலா சுந்தரராஜ் நியமனம்  தமிழக தலைமை செயலாளர் அறிவிப்புதென்காசி புதிய மாவட்ட ஆட்சியராக  S.கோபால சுந்தரராஜ் IAS..நியமனம் செய்து தமிழக தலைமை செயலர் அறிவிப்பு S கோபல சுந்தர்ராஜ்  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள மயில் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகவேல் அவர்களின் மகன் ஆவார் இவர் ஆரம்ப கல்வியை ராமநாதபுரம் மற்றும் சந்திரகுடி அருகே மென்னந்தி கிராமத்திலும் நடுநிலை கல்வியை சந்திரக்குடி அருகே மென்னந்தி கிராமத்திலும் நடுநிலைக் கல்வியை மாவிலா தோப்பிலும் உயர்க்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வியை ராமநாதபுரம் செய்யது அம்மாள் பள்ளியிலும் முடித்துள்ளார் அதனையடுத்து பி.எஸ்.சி (விவசாயம் இளங்கலை) கல்வியை கோவை வேளாண் கல்லூரியிலும் முதுகலை விவசாயத்தை டெல்லி பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளா  அதனையடுத்து 2012ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 5வது இடத்தை பிடித்த வெற்றிபெற்றவர் அதனை அடுத்து தமிழக அரசு தற்போது சாதாரண ...

பெங்களூருவில் ராணுவ மட்டத்திலான சிறு பதட்டம்!

படம்
  🧲🍀 சிக்கிய இரண்டு கருப்பு ஆடுகளில் ஒன்று தமிழகத்தை சேர்ந்தது மற்றொன்று கேரள மலபுழையை சேர்ந்தது. பெயர் கௌதம் விஸ்வநாதன் 27, இப்ராஹீம் முல்லாட்டி முகமது பின்குட்டி 36. அப்படி என்ன செய்திருக்கிறார்கள்,.... சிம் பாக்ஸ் பயன் படுத்தி இந்திய வடகிழக்கு மாநிலமான...  அஸ்ஸாம் வழியாக கடக்க உதவும் #சிலிகுரி என்கிற ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இயங்கிவரும்...  கிழக்கு கட்டளைத்தளத்தினை தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டி இருக்கிறார்கள். இதனை புரிந்து கொள்ள இதன் பின்புலத்தை புரிந்து கொள்வது அவசியம். விஷயம் மிகப்பெரிய சங்கடத்தை கொடுக்க கூடியது. 👉பெங்களூருக்கு தமிழகத்தின் ஓசூர் பகுதியில் இருந்து உள்ளே வரும் போது அத்திப்பள்ளி என்கிற இடம் வரும்.  அதன் வலது புறத்தில் சர்ஜாபுரா எனும் இடத்திற்கு செல்ல பாதை பிரியும்.  இங்கு தான் பெங்களூருவில் உள்ள பல IT கம்பெனிகள் இயங்கி வருகிறது. இங்கிருந்து பெங்களூரு நகருக்கு செல்ல ஒரு பாதை இருக்கிறது.  அது சென்று முடிவடையும் இடம் பெல்லாண்டூர். வலப்புறம் மாரத்தள்ளி செல்லும் வெளிப்புற சுற்றுச்சாலை படு பசியான போக்குவரத்து கொண்ட இ...