இடுகைகள்

Tokyo Olympic 2021 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் கோலகலமாக நிறைவு; அமெரிக்கா, சீனா முதல் 2 இடம்; இந்தியா 48வது ரேங்க்

படம்
டோக்கியோவில் நடைபெற்ற 32வது ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை கைப்பற்றியது, இந்தியா 48-வது இடத்தை பிடித்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 16 நாட்களாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 11,326 வீரர்கள் பங்கேற்ற இந்த ஒலிம்பிக்கில், 33 விளையாட்டில் 339 போட்டிகள் நடைபெற்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் இன்றுடன்  நிறைவடைந்தது. இறுதிநாளான இன்று 3 தங்கப்பதக்கங்களை வென்ற அமெரிக்கா, சீனாவை பின்னுக்கு தள்ளி, பதக்கப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.  39 தங்கத்துடன் அமெரிக்கா ( மொத்தம் 113 பதக்கங்கள்) முதலிடத்திலும், 38 தங்கத்துடன் சீனா (மொத்தம் 88 பதக்கங்கள்) இரண்டாமிடத்திலும், 27 தங்கத்துடன் ஜப்பான் (மொத்தம் 58 பதக்கங்கள்) மூன்றாமிடத்திலும் உள்ளன. இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் 48வது இடத்தை பிடித்தது. 2024 ஒலிம்பிக், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. மற்ற நாடுகள் முறையே பெற்ற தங்கப் பதக்கங்கள்: பிர...

Neeraj Chopra | தங்கப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.. டோக்யோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் சாதனை!

படம்
  நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் 66வது இடத்தில் இருந்த இந்தியா 46வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.          டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கம் வென்றார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை இன்று படைத்திருக்கிறார். சுதந்திரத்துக்கு பின்னர் தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அதே போல தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்திருக்கிறார். முன்னதாக அபினவ் பிந்த்ரா 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதிச் சுற்றில் ஜெர்மனி, பெலாரஸ், பாகிஸ்தான் நாட்டின் வீரர்கள் நீரஜ் சோப்ராவுக்கு கடுமையான சவால் அளித்தனர். நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 87.03 மீட்டரும், இரண்டாம...

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா..!!

படம்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.  65 கிலோ எடைப்பிரிவில் கஜகஸ்தான் வீரரை இந்திய வீரர் பஜ்ரங் புனியா வீழ்த்தினார்.  கஜகஸ்தான் வீரர் டவுலெட் நியாஸ்பெகோவை 8 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் குத்துச்சண்டை - வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா

படம்
69 கிலோ எடைப்பிரிவான மகளிர் வெல்ட்டர் வெயிட் அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மெனெலி புசெனாஸிடம் தோல்வியுற்றார் இந்தியாவின் லவ்லினா. இதனால் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கெனவே மீராபாய் சானு, பி.வி.சிந்து ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளர்.

டோக்கியோ ஒலிம்பிக் - இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

படம்
ஒற்றையர் பிரிவில் சீனா வீராங்கனையை வீழ்த்தி வெண்கலம் வென்றார் இந்தியாவின் பி.சி சிந்து  2016 ஒலிம்பிக்ஸ் - வெள்ளி 2021 ஒலிம்பிக்ஸ் - வெண்கலம் தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சாதனை __________________________________________________ நீச்சல் முதல் உணவு வரை.. 120 கிமீ பயணம் முதல் அற்பணிப்பு வரை.. .சிந்து குறித்து தெரியாத விஷயங்கள்! ஜப்பான்: பேட்மிண்டன் குறித்த செய்திகளில் மட்டும் வரும் பி.வி.சிந்து குறித்து யாருக்கும் தெரியாத 8 விஷயங்களை பார்க்கலாம். டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்து கிட்டத்தட்ட ஒருவார காலம் ஆகப்போகிறது. அதன்பிறகு இத்தனை நாட்களாக ஒரு பதக்கம் கூட இல்லாமல் இருந்த இந்தியாவுக்கு இன்று சிறப்பாக அமைந்துள்ளது. மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.  வெண்கலப்பதக்கம்  வெண்கலப்பதக்கம் நேற்று அரையிறுதி தோல்வியை தழுவிய பி.வி.சிந்து இன்று வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை ஹீ பிங் ஜியாயோவை எதிர்த்து சிந்து போட்டியிட்டார். இந்த போட்டியில் சிறப...

ஒலிம்பிக் பளுதூக்குதலில் சாதனை வெற்றி.. குவியும் வாழ்த்துகள் - யார் இந்த மீராபாய் சானு?

படம்
modi-and-stalin-wishes-to-meerabai-sanu டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிபதக்கம் வென்ற மீராபாய்க்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.  இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவின் சொந்த மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நோங்பாக் காக்சிங் தான் (Nongpok Kakching) மீராபாய் சானு பிறந்து, வளர்ந்த கிராமம். நிரந்தர வேலை இல்லாமல் கிடைக்கின்ற வேலையை செய்து வந்துள்ளனர் அவரது பெற்றோர். அதே கிராமத்தில் இயங்கி வந்த பள்ளியில் ஆரம்ப கல்வியை படித்துள்ளார் சானு. ஒன்பது வயதான மீராபாய் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது விடுமுறை நாளில் டிவியில் ஸ்போர்ட்ஸ் சேனலை பார்த்து கொண்டிருந்தார். அதில் குஞ்சரணி தேவி பளு தூக்குதலில் 2004 ஒலிம்பிக்கில் அசத்திக் கொண்டிருந்தார். அதை பார்த்து தான் அவருக்கு பளு தூக்குதலில் ஆர்வம் வந்தது என மீராபாய் சானுவின் தாயார் தெரிவிக்கிறார். மேலும், அந்த போட்டி முடிந்தவுடன் இந்தியாவிற்கு தான் பளு தூக்குதலில் பதக்கம் வென்று தருவேன் என்ற ஆர்வத்தோடு வீட்டு வாச...