இடுகைகள்

மருத்துவ குறிப்புகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலை முடியைப் பாதுகாக்கும் தேங்காய்

படம்
  தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும். வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும், தண்ணீரில் சுத்தம் செய்யவும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும். வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் மற்றும் கடலை மாவு ஆகிய இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீரில் கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும். தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகு...

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவப் பயன்கள்

படம்
  கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் தேங்காய் எண்ணையைக் கலந்து அடுப்பில் வைத்து சூடேற்றி அந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் முடி கருத்து நரை ஏற்படாது. கரிசலாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் பிரகாசம் அடையும் மற்றும் கண்களுக்கும் மூளைக்கும் நல்ல குளிர்ச்சியை தரும். இந்த கீரை சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் புண்கள் மற்றும் அடிபட்ட இடத்தில் இந்த கீரையின் இலையை அரைத்து அதன் மேல் தடவி வர நல்ல பலனை காணலாம். குழந்தைளின் சளிக்கு இந்த கீரை சிறந்து மருந்தாக பயன்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து அதனுடைய சாறை எடுத்து காலை மற்றும் மாலை இரண்டு அவுன்ஸ் வீதம் ஏழு நாட்களுக்கு கொடுக்க மஞ்சள் காமாலை குணமடையும். கல்லீரல் வீக்கம் அடைந்த குழந்தைகளுக்கு இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கரைத்து கொடுத்தால் ஈரல் வீக்கம் குறையும். மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கும் காலங்களில் கரிசலாங்கண்ணியின் இலையை வேகவைத்து அதை வடிக்கட்டி காலை மற்றும் மாலை இரண்டு அவுன்ஸ் குடித்துவர நல்ல பலனை காணலாம். கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் த...

நம்மை பளப்பளக்க வைக்கும் பப்பாளி

படம்
பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.  பப்பாளிப் பழ பேக்கை முகத்தில் அடிக்கடி போட்டுக் கொண்டால், முகம் நல்ல நிறமாக இருக்கும். இதற்கு காரணம், முகத்தின் மேற் பகுதியில் அதிக அளவு மெலனின் சேர்வதை, பப்பாளி தடுத்து விடுகிறது. பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கி அதில் சிறிது முல்தானி மட்டியை கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுதண்ணீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும். பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து அரைத்துக்கொள்ளவும். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், வெகு சீக்கிரமே முகம் மென்மையானதாக மாறி விடும. சோற்றுக்கற்றாழை இலை ஜெல்லுடன் பப்பாளி கூழை கலந்து கொள்ளவும். இதை கழுத்து மற்றும் முகத்தில் பூசி நன்றாக தேய்க்கவும், பின் காய்ந்ததும் தண்ணீரில் கழுவும். வாரம் இரண்டு முரை இப்படி செய்தால் கருப்பு புள்ளிகள் மறையும். பப்பாளி கூழ். கஸ்தூரி மஞ்சள் தூள், விளக்கெண்ணை ஆகிய மூன்றையும் கலந்து பாதங்களில் தடவி சிறித...

பச்சை பட்டாணியின் மருத்துவப் பயன்கள்

படம்
கண்பார்வைத் திறனுக்கு வைட்டமின் யு இன்றியமையாதது. உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் பட்டாணியில் உள்ள வைட்டமின் ஊ பயன்படுகிறது, வாய் நாற்றமும் அகன்றுவிடுகிறது. நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற டீ குருப் வைட்டமின்கள் உள் உறுப்புகள் அனைத்தையும் வலிமைப்படுத்துகின்றன. வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான உறுப்புகள் நன்கு செயல்படவும் இதில் உள்ள வைட்டமின் டீ நன்கு பயன்படுகிறது. நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சை பட்டாணி. பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள். 100 கிராம் பட்டாணியில் 81 கிலோ கலோரிகள் உள்ளன. இதில் கொலஸ்ட்ரால் இல்லை. புரதம் நிறைந்தது. கரையும், கரையாத தன்மையுள்ள நார்ச்சத்து உள்ளது. பட்டாணியில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் அவசியம். பட்டாணியில் உள்ள பைட...

முகத்தின் கருமை நீங்கி பளிச்சிட பயன்படும் தயிர்

படம்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மென்மையாகவும் மாற்றும். தயிர் வயதான தோற்றத்தை மறைத்து, இளமையைத் தக்கவைக்கும். மோரினால் முகத்தைக் கழுவ, வெயிலால் ஏற்படும் கருமை மறையும். தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை, கால்களில் தடவி வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகம் பொலிவாகும். முக்கியமாக, ஒரு மாதத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தினால் முகம் பளபளப்பாகும். கடலை மாவு, தயிர், மஞ்சள் ஆகிய இம்மூன்றையும் கலந்து பேஸ்டாக ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு அதை இதமாக முகத்தில் நன்கு தடவி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு பசும்பால் கொண்டு முகத்தை கழுவவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவி, வெண்மைநிற துணியால் முகத்தை இதமாக துடைக்கவும். இம்முறையை வாரம் இருமுறை தொடர்ந்து செய்துவர உங்கள் முகம் பால்போல் வெண்மையாக ஜொலிக்கும்.  தயிரில் உள்ள சருமப் பளபளப்புக்கு உதவும். கூந்தலுக்கும் நல்லது செய்யும். அரை கப் கடலை மாவில், புளித்த தயிர் சிறிது சேர்த்து, தலை முதல் பாதம் வரை தடவித் தேய்த்துக் குளித்தால் கூந்தலும், சரும...

வெங்காயத்தாளின் மருத்துவ பயன்கள்

படம்
  வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது. வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும் வகையில் உள்ளது.

சமையல் உப்பின் பயன்கள்

படம்
உப்பை உணவுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா என்ன??? வேறு சில பயன்பாடுகளுக்கும் உப்பு பயன்படுகிறதே, அதனை அறிவோமா??  அரிசியில் சிறிது உப்புத் தூளைக் கலந்து வைத்து விட்டால், எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருந்தாலும் அது புதிதாகவும் புழுப் பூச்சிப் பிடிக்காமலும் இருக்கும். பாதம் நனையும் அளவுக்கு ஒரு அகலமான பாத்திரத்தில், மிதமான சூட்டில், வென்னீர் எடுத்து, அதில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, 10 நிமிடங்கள், பாதங்களை நீரில் வைக்கவும்.  இதை, தொடர்ந்து செய்து வந்தால், கால்கள் மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும். கால் வலி இருந்தாலும் பறந்து போகும். கேரட், பீட்ரூட் வாடிப் போனால், நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை, உப்பு கலந்த நீரில், சிறிது நேரம் போட்டு வைத்தால், ப்ரஷ்ஷாகி விடும்; நறுக்குவதும் எளிதாக இருக்கும். ஒரு பக்கெட் தண்ணீரில், ஒரு கப் கல் உப்பு சேர்த்து, அதில் ஜீன்சை ஊற வைத்து பின் துவைத்தால், கலர் மாறாமல் அப்படியே நீடித்திருக்கும். முதல் முறை மட்டுமல்ல, ஒவ்வொரு முறை துவைக்கும் முன்பும் இப்படி செய்யலாம். பண்டிகைக்கு செய்த பட்சணங்கள் மீதமிருந்தால், நீண்ட நாட்கள்,...

தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை

படம்
கறுப்பு திராட்சையின் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும் . முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும் .     முகம் கருத்துவிட்டதா கவலை வேண்டாம் . திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி , சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் , கருமை நீங்கி பொலிவு பெறும் .     திராட்சை பழச்சாற்றில் சூரிய வெப்பத்தால் தாக்கக்கூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் வெப்பக் கட்டிகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளது . திராட்சை சாறு சருமப் பிரச்சனைகளைத் தடுக்கும் சக்தி கொண்டது . வெயில் காலத்தில் தினமும் ஒரு கப் திராட்சை சாறு அருந்தினால் சருமச் சிக்கலை தவிர்க்கலாம் .     திராட்சை பழச்சாறு இறந்த செல்களை நீக்கும் திறன் கொண்டது . இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்டதால் , ச...

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவப் பயன்கள்

படம்
  கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் தேங்காய் எண்ணையைக் கலந்து அடுப்பில் வைத்து சூடேற்றி அந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் முடி கருத்து நரை ஏற்படாது .     கரிசலாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் பிரகாசம் அடையும் மற்றும் கண்களுக்கும் மூளைக்கும் நல்ல குளிர்ச்சியை தரும் . இந்த கீரை சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் புண்கள் மற்றும் அடிபட்ட இடத்தில் இந்த கீரையின் இலையை அரைத்து அதன் மேல் தடவி வர நல்ல பலனை காணலாம் . குழந்தைளின் சளிக்கு இந்த கீரை சிறந்து மருந்தாக பயன்படுகிறது .     மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து அதனுடைய சாறை எடுத்து காலை மற்றும் மாலை இரண்டு அவுன்ஸ் வீதம் ஏழு நாட்களுக்கு கொடுக்க மஞ்சள் காமாலை குணமடையும் .     கல்லீரல் வீக்கம் அடைந்த குழந்தைகளுக்கு இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கரைத்து கொடுத்தால் ஈரல் வீக்கம் குறையும் .     மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு இரத்...

நமது உணவு பழக்கவழக்கத்தால் ஏற்பட்டு வரும் விளைவுகள்

படம்
  நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ , கொசுவோ , நீரோ , காற்றோ கிடையாது ...   இதோ ,   1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்கள்   2 - டீ   3 - காபி   4 - வெள்ளைச் சர்க்கரை   5 - வெள்ளைச் சர்க்கரையில் செய்த இனிப்பு   6 - பாக்கெட் பால்   7 - பாக்கெட் தயிர்   8 - பாட்டில் நெய்   9 - சீமை மாட்டுப் பால்   10 - சீமை மாட்டுப் பால் பொருட்கள்   11 - பொடி உப்பு   12 - ஐயோடின் உப்பு   13 - அனைத்து ரீபைண்டு ஆயில்   14 - பிராய்லர் கோழி   15 - பிராய்லர் கோழி முட்டை   16 - பட்டைத் தீட்டிய அரிசி   17 - குக்கர் சோறு   18 - பில்டர் தண்ணீர்   19 - கொதிக்க வைத்தத் தண்ணீர்   20 - மினரல் வாட்டர்   21 - RO தண்ணீர்   22 - சமையலுக்கு அலுமினியப் பாத்திரங்கள்   23 - Non Stick பாத்திரங்கள்   24 - மைக்ரோ ஓவன் அடுப்பு   25 - மின் அடுப்பு ...

கன்னத்தை பளபளப்பாக்கும் தக்காளி

படம்
தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்கி, அதில் சிறிது ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும். சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும். தக்காளி விழுது மற்றும் பாதாம் விழுதை சம அளவு எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும். நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து காணப்படும். அவர்களுக்கு தக்காளியின் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து, நன்றாக முகத்தில் தேய்த்து கழுவினால் முகம் மிருதுவாகும். தக்காளி சாறு, தேன் மற்றும் சிறிது சமையல் சோடா இந்த மூன்றையும் நன்றாக கலந்து, பேஸ் மாற்றி கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையம் மறையும்....

உங்கள் பாதங்களின் உட்புறம் COCONUT OIL ஐப் பயன்படுத்துங்கள்....

படம்
  என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்டார், முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை .... ஒருமுறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு வயதானவரை அறிந்திருப்பதாகக் கூறினார்.  நான் தூங்கும்போது என் கால்களில் எண்ணெயை இடுகிறேன் என்று அறிவுறுத்தியிருந்தேன்.  *இது சிகிச்சை மற்றும் உடற்தகுதிக்கான எனது ஒரே ஆதாரமாகும்.*  நான் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தூங்கினேன்.  என்னால் தூங்க முடியவில்லை.  நான் வெளியே நடக்க ஆரம்பித்தேன்.  இரவில் வெளியே உட்கார்ந்திருந்த பழைய காவலாளி என்னிடம், "என்ன விஷயம்?"  நான் தூங்க முடியாது என்று சொன்னேன்!  அவர் சிரித்துக்கொண்டே, "உங்களிடம் *தேங்காய் எண்ணெய்* ஏதேனும் இருக்கிறதா?"  நான் இல்லை என்று சொன்னேன், அவர் சென்று தேங்காய் எண்ணெயைக் கொண்டு வந்து, "உங்கள் கால்களின் பாதங்களை சில நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்" என்றார்.  பின்னர் குறட்டை போட ஆரம்பித்தார்.  இப்போது நான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளேன். *இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜ்* செய்ய முயற்சித்தேன்.  இது எனக்...