இடுகைகள்

LAW BOOKS & AMENDMENTS லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலையாட்களுக்கு இருக்கை வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது

படம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றம் நிறுவனங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு சட்ட முன்வடிவை தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தாக்கல் செய்தார்.  *அதில் கூறியிருப்பதாவது:* மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பல வகையான உடல்நலக்கேடுகளுக்கு ஆளாகின்றனர். தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலையை கருத்தில் கொண்டு, கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்க வேண்டும் என்றே கருதுகிறது. 4-9-2019 அன்று நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்குவது தொடர்பான ஆலோசனை முன் வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களால் ஒத்த கருத்துடன் இந்தக் கோரிக்ைக ஏற்கப்பட்டது.எனவே இந்த அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.இவ்வாற...

ஃபேக்டரிங் ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவால் பலன் என்ன? - Benefits-of-Factoring-Regulation-Amendment-Bill

படம்
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுள் ஒன்று ஃபேக்டரிங் ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா (Factoring Regulation (Amendment) Bill, 2021). இதன் முக்கியத்துவம் குறித்து, இதன்மூலம் சிறு, குறு நிறுவனங்களுக்கு கிடைக்க கூடிய நன்மை குறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம். ஒரு தொழிலின் முக்கிய நோக்கமே வருமானம்தான். ஆர்டர் கிடைத்துவிட்டால் பொருள் அல்லது சேவையை வழங்கிவிடுவோம். ஆனால், சரியான நேரத்தில் பணம் கிடைக்காது. சரியான நேரத்தில் பணம் வந்தால்தான் அடுத்த வேலையை நிறுவனங்கள் செய்ய முடியும். கடனை அடைப்பது, சம்பளம் கொடுப்பது என நிறுவனங்கள் செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நம் உடம்பில் ரத்த ஓட்டம் இருப்பதுபோல நிறுவனங்களில் பணப்புழக்கம் இருந்தால்தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும். கடைகளில் காசு கொடுத்து பொருட்களை நாம் வாங்குவோம். ஆனால், சிறு நிறுவனங்களை பொருள்/சேவை கொடுத்து பில் அனுப்பி காத்திருந்து பணத்தை பெறுவார்கள். இந்தக் காத்திருப்பு காலத்தை குறைப்பதுதான் ஃபேக்டரிங் (Factoring). பணத்துக்காக காத்திருக்காமல் அந்த பில்லினை வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவன...