நெல்சன் மண்டேலா (NELSON MANDELA)
பெயர் : நெல்சன் மண்டேலா இயற்பெயர் : நெல்சன் ரோலிஹ்லா மண்டேலா பிறப்பு : 18/07/1918 இறப்பு : 05/12/2013 இடம் : தென்னாப்பிரிக்கா வகித்த பதவி : தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் விருதுகள் : பாரத ரத்னா, நேரு சமாதான விருது, உலக அமைதிக்கான நோபல் பரிசு வரலாறு:-நெல்சன் மண்டேலா...!! 👉 நெல்சன் மண்டேலா 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். 👉 நெல்சன் மண்டேலாவின் தந்தைக்கு நான்கு மனைவிகள் மற்றும் 13 பிள்ளைகள் இருந்தனர். அதில் மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் நெல்சன் மண்டேலா. 👉 இவரது இயற்பெயர் நெல்சன் ரோலிஹ்லா மண்டேலா ஆகும். இவரது பெயரின் முன் உள்ள நெல்சன் என்பது இவர் கல்வி பயிலும்போது அவரது பள்ளி ஆசிரியரால் சூட்டப்பட்டதாகும். 👉 நெல்சன் மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். அப்போதே போர் புரியும் கலைகளையும் பயின்றார். 👉 நெல்சன் மண்டேலா இளம்பருவத்தில், ஒரு குத்துச்சண்டை வீரர். 'குத்துச்சண்டை ஒரு சமத்துவமான விளையாட்டு. குத்துச்சண்டை நடக்கும் மேடையில், மனிதர்களின் தரம், வயது, நிறம் மற்றும் அவர்களின் பணம் இவைகளெல்ல...