ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்!
ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்! நம் நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர், ஏவுகனை நாயகன் அப்துல் கலாம், நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத்தலைவர் முதல், பலமுக்கிய பதவிகளில் பணியாற்றிய போதும், “மக்கள் தன்னை ஒரு ஆசிரியராக நினைவுகூர்ந்தால், அதுதான் பெருமை தரக் கூடிய தருணம்” என்றார். சிறப்பான சில ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள் இங்கே. ஆசிரியர் என்பவர் கடினமான விஷயங்களை எளிதாக்கக்கூடிய ஒரு நபர். ரால்ப் எமர்சன் யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்; போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். கதே தாயின் முகம் தான் குழந்தையின் முதல் பாடப் புத்தகம். காந்தியடிகள் இயற்கை தான் மிகச் சிறந்த ஆசிரியர். கார்லைல் கல்விக்கூடம் ஒரு தோட்டம். மாணவர்கள் செடிகள். ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள். ஜிக்ஜேக்ளர் நீங்கள் மற்றவர்களுக்கு கற்பிக்கும் போது வேகமாகவும் சிறப்பாகவும் கற்றுக்கொள்கிறீர்கள். ரோசா லக்சம்பர்க் ஒரு ஆசிரியர், நேர்மையானவர் என்றால், எப்போதும் கவனமுள்ள மாணவராக இருக்க வேண்டும். கார்க்கி எம். நான் உ...