புதுச்சேரி மாவட்டம் (PUTHUCHERI DISTRICT)
புதுச்சேரி ஒன்றியப் பகுதி தற்போது பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படுகின்றது. சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த நகரம் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. ஆந்திர மாநிலத்தின், காக்கி நாடாவுக்கு அருகாமையில் உள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையில் உள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள மாஹே நகரும், இந்த மாநிலத்தின் ஆட்சிப் பகுதிகளாக விளங்குகின்றன. இம்மாநிலம் நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. புதுச்சேரி மாவட்டம் புதுச்சேரி மாவட்டம் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். முன்னதாக பாண்டி என சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்த நகரம் 2006ஆம் ஆண்டிலிருந்து புதுச்சேரி என அழைக்கப்படுகிறது. பின்னர் புதுவை என்று அழைக்கப்படுகிறது. புதுச்சேரி மாவட்டம் 290 ச.கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 735,332 ஆகும். புதுவை மாவட்டத்தில் உள்ள வட்டங்கள் 1. புதுவை ...