ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி: ஒரு பொருளாதார அறிஞரின் அரசியல் எழுச்சியும் வீழ்ச்சியும்
அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடினார், ஆனால் மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை என்று கூறிய அவர் தலிபான்கள் வென்று விட்டனர் என்று கூறி உள்ளார். ஆஃப்கானிஸ்தானில் அரசுப்படைகள் மற்றும் தாலிபான்களுக்கிடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர், அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடினார், ஆனால் மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை என்று கூறிய அவர் தலிபான்கள் வென்று விட்டனர் என்று கூறி உள்ளார். தோல்வியடைந்த நாடு என்ற வரிசையில் ஆப்கானிஸ்தான் இருக்கும் போது 2014-ல் அஷ்ரப் கனி ஆப்கானை மறுகட்டுமானம் செய்ய அதிபராக்கப்பட்டார். ஆனால் இவரால் தலிபான்களையும் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஊழலையும் தடுக்க முடியவில்லை. இந்நிலையில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்ட பின்பு ஆப்கான் படைகளை ஓட ஓட விரட்டிய தலிபான்கள் இப்போது ஆப்கானிஸ்தானத்தையே கைப்பற்றினர். இது தொடர்பாக அஷ்ரப் கனி கூறும்போது, “தங்களது வாள் மற்றும் துப்பாக்கிகளின் தீர்ப்பில் தலிபான்கள் வெற்றி கண்டனர். இப்போது இவர்கள் நாட்டு மக்களின் கவுரவம், சொத்த...