மு. வரதராசனார் (M.VARATHARASANAR)
பெயர் : மு. வரதராசனார் இயற்பெயர் : மு. வ. பிறப்பு : 25-04-1912 இறப்பு : 10-10-1974 பெற்றோர் : முனுசாமி முதலியார், அம்மாக்கண்ணு இடம் : வேலூர் வகித்த பதவி : தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர் விருதுகள் : சாகித்திய அகாதமி விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார். வாழ்க்கைச் சுருக்கம்: மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. மு.வ. வின் கல்வி,வ...