சுனில் பார்தி மிட்டல்
பெயர் : சுனில் பார்தி மிட்டல் பிறப்பு : 23-10-1957 இடம் : பஞ்சாப் வகித்த பதவி : Airtel நிறுவனர் வரலாறு:-Airtel அறிமுகம்..!! 👉ஆரம்ப காலக்கட்டத்தில் மொபைல்போனை காண்பதே அரிது. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் மொபைல்போன் இல்லாத கைகளே இல்லை என்று கூறலாம். 👉தற்சமயம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபாரமாக வளர்ந்து வருகிறது. இதன் விளைவுதான் மொபைல்போன்களில் இன்டர்நெட் கனெக்ஷன். 👉2G-ல் ஆரம்பித்த இந்த வளர்ச்சி இன்று 4G வரையிலும் வளர்ச்சியடைந்து உள்ளது. இதன்மூலம் உலகத்தையே மொபைல்போனில் அடக்கிவிட்டனர். 👉4Gஐ முதலில் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய நிறுவனம் 'AIRTEL'. இதன்மூலம் இந்தியாவில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்தது. 👉தகவல் தொழில்நுட்பத்தில் இன்டர்நெட் முதல் DTH வரை தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது இந்த நிறுவனம். 👉சைக்கில் உதிரிபாகங்களை விற்க ஆரம்பித்த ஒருவர் தற்போது உலகத்தில் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க்கான ஏர்டெல்லை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவருக்கு கீழ் கிட்டத்தட்ட 20000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். 👉கையில் ஒன்றுமே இல்லாமல் தந்தையிடம் இருந்து வாங்கிய 15,...