இடுகைகள்

சமூகப் போராளிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருதநாயகம் (MARUTHANAYAGAM)

படம்
  பெயர் : மருதநாயகம் இயற்பெயர் : முகமது யூசுப் கான் பிறப்பு : கி.பி.1725 இறப்பு : 15-10-1764 இடம் : பனையூர், இராமநாதபுரம், தமிழ்நாடு வகித்த பதவி : சமூகப் போராளி, அரசியல்வாதி வாழ்க்கை வரலாறு                  முஹம்மத் யூசுப் கான் அவர்களே இந்திய வரலாற்றில் மருதநாயம் என்று அடையாளப்படுத்தப்டுத்தப்படுகிறார்கள். ஆயுதங்கள் துளைக்காத உடலைக்கொண்ட ஒரு மனிதன் 18ம் நூற்றாண்டில் வாழந்த ஒரே மனிதன்  18ம்  மட்டுமே என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்.                   இந்தியாவின் தமிழ்நாடு ராமநாதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டில் பிறந்தார். மருதநாயகத்தின் குடும்பத்தினர் இந்து வேளாளர் குலத்தை சேர்ந்தவவர்கள். மருதநாயகம் என்று அழைக்கப்படும் யூசுபப் கான் அவர்கள் சிறுவயதில் முகம்மது கமல் என்ற இராணுவ வைத்தியரால் வளர்க்கப்பட்டர். மருதநாயகம் என்ற அழைக்கப்படும் முஹம்மத் யூசுப் கான் அவர்கள் சிறுவயது முதல் யோகா, வர்மக்கலை ஆகிய துறைகளில் ஆழமான பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்....

சாக்ரடீஸ் (SOCRATES)

படம்
  பெயர் : சாக்ரடீஸ் பிறப்பு : கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு இடம் : ஏதென்ஸ் வகித்த பதவி : தத்துவஞானி வரலாறு:-தத்துவஞானிகளின் தந்தை!! ⭐இன்று அறிவியல் ஞானத்தால் வளர்ச்சி அடைந்து கம்பீரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த ஒளிமயமான உலகம், ஒரு காலத்தில் அனைத்தும் இருந்தும் அறியாமை என்னும் இருட்டுக்குள் மூழ்கிக்கிடந்தது. ⭐அந்த அறியாமை இருட்டை, கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்து, கேள்வி என்ற ஒரு மந்திர சொல்லுக்கு புது முகவரி அமைத்தார் ஒரு சரித்திர நாயகன். ⭐அறிவை தெளிவாக்குகின்ற, வளர்க்கின்ற ஆதார சக்தியான தத்துவத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவர். ⭐நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தியவர். ⭐வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் கொண்டிருந்தவர். அவர்தான் தத்துவஞானி சாக்ரடீஸ். ⭐மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது.  ⭐வரலாற்றின் பல்வேறு காலக்கட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர். ⭐உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தத்த...

சேகுவாரா

படம்
  பெயர் : சேகுவாரா பிறப்பு : 14-06-1928 பெற்றோர் : ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிலியா டெ ல செர்னா இடம் : அர்ஜென்டீனா வகித்த பதவி : புரட்சியாளர் வரலாறு:-சேகுவாரா !! 👉 உலகம் முழுக்க சில பரிச்சயமான உருவ அமைப்புகள் பல பிரபலமாகும், அது ஏன்? எதற்கு? எப்படி? என்று நம்மால் வரையறுக்க முடியாது. 👉 அப்படியான ஒரு உருவம்தான், முக சவரம் செய்யப்படாமல் சிலுப்பிய தலையோடு, சிகார் சகிதமாக, கம்பீரமான ஆளுமையாக, டி-சர்டில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் செருப்பு வரை ஒரு உருவம் பிரபலம் என்றால் அது சேகுவாரா தான். 👉 கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன். சேகுவாரா புரியாதவர்களுக்கு புதிர். புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன். சேகுவாரா யார்? 👉 ஏழைகளை அன்போடு அரவணைப்பவர். 👉 ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், அரசியல்வாதி. 👉 மேலும், கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர். 👉 சேகுவாரா என்றால் விடுதலை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்பதாகும். 👉 சேகுவாரா என்கிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது. இந்த தேசத்தின்...

கோ. நம்மாழ்வார் (Nammalvar)

படம்
  பெயர் : கோ. நம்மாழ்வார் பிறப்பு : 06-04-1938 இறப்பு : 30-12-2013 பெற்றோர் : ச. கோவிந்தசாமி இடம் : இளங்காடு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம் புத்தகங்கள் : தாய் மண், உழவுக்கும் உண்டு வரலாறு, நெல்லைக் காப்போம், வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் வகித்த பதவி : இயற்கை அறிவியலாளர் விருதுகள் : சுற்றுச் சூழல் சுடரொளி விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு இவர் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார். வாழ்க்கைக் குறிப்பு : நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 1938-இல் பிறந்தார். தந்தை பெயர் ச. கோவிந்தசாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்....

முத்துலட்சுமி ரெட்டி (Muthulakshmi Reddy)

படம்
  பெயர் : முத்துலட்சுமி ரெட்டி பிறப்பு : 30-07-1886 இறப்பு : 22-07-1968 பெற்றோர் : நாராயணசாமி, சந்திரம்மாள் இடம் : புதுக்கோட்டை, தமிழ்நாடு வகித்த பதவி : மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் விருதுகள் : பத்ம பூஷன் வரலாறு:-வாழ்க்கை வரலாறு முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். பிறப்பு: இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயணசாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர். சொந்த வாழ்க்கை: திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவர் டி. சுந்த...