கோவையிலிருந்து தாஜ்மஹாலுக்கு சிறப்பு விமான சுற்றுலா: ஐஆர்சிடிசி சார்பில் முன்பதிவு தொடக்கம்
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ( ஐஆர்சிடிசி ) சார்பில் கோவையில் இருந்து தாஜ்மஹாலுக்கு விமானம் மூலம் சுற்றுலா செல்வதற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது . இதுதொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : ரயில் மூலம் மட்டுமல்லாமல் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை ஐஆர்சிடிசி செயல்படுத்து வருகிறது . அதன் ஒருபகுதியாக , பாரத தரிசன சிறப்பு ரயில் மூலம் கோவா , சர்தார் படேல் சிலை , ஜெய்ப்பூர் , டெல்லி , ஆக்ரா ( தாஜ்மஹால் ) மற்றும் ஹைதராபாத் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . 12 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா பயணத்துக்கான ரயில் மதுரையில் இருந்து ஆகஸ்ட் 15- ம் தேதி புறப்படுகிறது . இதற்கு பயணத்துக்கு கட்டணமாக ரூ .12 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இதுதவிர , திருப்பதி , காளஹஸ்தி ஆகிய இடங்களுக்கு செல்லும் மூன்று நாட்கள் சுற்றுலா பயணத்துக்கான ரயில் ஆகஸ்ட் 27- ம் தேதி கோவையிலிருந்து புறப்படுகிறது . இந்த ரயில் திருப்பூர் , ஈரோடு , சேலம் வழியாக செல்லும...