விநாயகர் சதுர்த்தி விரத மஹிமை
பிள்ளையார் அவதரித்த கதை விநாயகர் சதுர்த்தி ஏன் வந்தது என்பது பற்றியும் அவரது படைப்பு பற்றியும் புராண கதைகள் உள்ளன. கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ததால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன. அசுரனின் தவம் முன்னொரு காலத்தில், மாகதர் என்ற முனிவருக்கும், விபுதை என்ற அரக்கிக்கும் மகனாகப் பிறந்தவன் கஜமுகன் என்ற அசுரன். இவன் யானை முகமும், தலையில் இரு கொம்புகளும் உடையவன். அசுர குல குருவாகிய சுக்கிராச்சாரியாரின் போதனைப்படி, சிவபெருமானின் திருநாமத்தை சொல்லிக்கொண்டே பல ஆண்டுகள் காலம் கடுமையான தவம் இருந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான், அவன்முன் தோன்றி, என்ன வரம் என்று கேட்டார். அதற்கு அவன், தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ கொல்லமுடியாத அளவிற்கு வரம் வேண்டும் என்று கேட்டுப்பெற்றார். வஞ்சக எதிரிகளின் சூழ்ச்சியால் ஒருவேளை எனக்கு மரணம் நேரிட்டாலும், எனக்கு இன்னொரு பிறவி கிடைக்கக் கூடாது என்றும் வேண்டினார். அவனது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் கேட்ட வரத்தை கொடுத்தார். துன்புறுத்திய அசுரன் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையா...