தகவல் அறியும் உரிமைச் சட்டம்- 2005 இன் 6 வது பிரிவில் தகவல் பெறுவதற்கான கோரிக்கை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை விளக்குகிறது!
6(1) இந்த சட்டத்தின்படி அரசிடம் தகவல் பெற விரும்பும் ஒருவர் ஆங்கிலம், ஹிந்தி, & விண்ணப்பம் செய்யப்படுகிற வட்டார ஆட்சி மொழியில் எழுத்து மூலமாக அல்லது மின்னனு சாதானம் மூலமாக வகுத்துரைக்கப்படும் கட்டணத்துடன் தொடர்புடைய பொது அதிகார அமைப்பின் மையப் பொதுத்தகவல் அலுவலருக்கு அல்லது நேர்வுக் கேற்ப மாநிலப் பொதுத்தகவல் அலுவலருக்கு மையப் பொது உதவி பொதுத்தகவல் அலுவலருக்கு அல்லது நேர்வுக்கேற்ப மாநில உதவி பொதுத்தகவல் அலுவற்றுக்கு மனுதாரால் நாடப்படும் தகவல் குறித்த விபரங்களை கூறி கோரிக்கை ஒன்றை செய்யலாம் அது வேண்டுகோள் விண்ணப்பமாக கருதப்படும். 6(2) வது பிரிவில் தகவலுக்காக கோரிக்கை ஒன்றை செய்கிற விண்ணப்பதாரர் அத்தகவல் எதற்காக தேவைப்படுகிறது என்ற காரணத்தைக் கூற வேண்டிய அவசியமில்லை. Hi6(3) எந்தவொரு தகவலும்(i) பிறிதொரு பொது அதிகார அமைப்பினால் பராமரித்து வரப்படுகிறதோ & (ii) பிறிதொரு அதிகார அமைப்பின் செயற்பணிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளதாக அதன் உருப் பொருளை கொண்டிருக்கிறதோ அந்தத் தகவலைக் கோரி ஒரு பொது தகவல் அலுவலரிடத்து விண்ணப்பித்திருக்கும் பட்சத்தில்...