15 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் வழங்கப்பட்டது
15 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் வழங்கப்பட்டது
தென்காசி மாவட்டம், கடந்த 2019-2020 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு காவல்துறையின் சேமநல நிதியிலிருந்து கல்வி உதவித்தொகையை *காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள்* வழங்கினார், இதில் கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 10,000 ரூபாயும், பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 18,000 ரூபாயும் வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில் காவல்துறையில் பணிபுரியும் உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படும் படி நடந்துகொண்டு உயர் பதவியை அடைய வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். உதவி தொகை பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக