கொரானாவை விட பேரழிவு இளைஞர்களின் எதிர்காலம் சிதைக்கப்படுவது
அரசுப்பணியாளர் தேர்வாணையத்தை நம்பி தயாராகிக்கொண்டிருக்கும் இளைஞர்களின்* எதிர்காலம் காப்பற்றப்பட வேண்டும்.
கொரானாவைக் காரணம் காட்டி ஓய்வு வயது 58 லிருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டதால் என்ன பயன் கிடைத்தது.
நன்கு சிந்தித்தால் பயன் ஒன்றுமில்லை. மாறாக அரசுக்கு கூடுதலாக நிதியிழப்புதான் ஏற்படுகிறது.
ஏனெனில் இந்த இரண்டு வருடங்களில் ஓய்வுபெற உள்ள ஊழியர்களுக்கு இரண்டு வருடங்கள் கழித்தும் அதே ஓய்வுப்பலன்கள்தான் வழங்கப் போகிறோம்.
மேலும் உண்மையில் இந்த இரண்டு வருடங்களில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற வருடாந்திர ஊதிய உயர்வுகளால் கூடுலான ஓய்வூதியப்பலன்கள் வழங்க வேண்டும்.
கூடுதலான ஓய்வூதியமும் வழங்க வேண்டும் இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையே ஏற்படும்.
மேலும் இந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற இருப்பவர்கள் பல ஆண்டுகள் பணியாற்றி உயர்நிலை ஊதியம் பெறுபவர்கள். இந்த இரண்டு வருடங்களுக்கும் அந்த உயர்நிலை ஊதியம் வழங்க வேண்டும். இதன் மூலமும் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை உண்டாகும்.
ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டதால்
இந்த இரண்டு வருடங்களில் ஓய்வுபெற இருந்தவர்களுக்கு இரண்டு வருடங்களிலும் வழங்கப்படும் ஊதியத்தைக் கொண்டு மூன்று மடங்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்து ஊதியம் வழங்கியிருக்கலாம்.
இதனால் இளைஞர்களின் வேலைதிறன் கூடுதலாகக் கிடைத்து வளர்ச்சியினை நோக்கி சென்றிருக்கும்.
அரசுக்கும் இழப்புடன் இளைஞர்களுக்கான அரசுத்துறை வேலைவாய்ப்புகளும் இந்த பேரிடர் காலத்தில் இல்லாமல் போயிருக்கிறது.
கடேசியாக 2019 ஜீன் மாதத்தில் குரூப்-4 தேர்வு அறிவிப்பு வந்தது அதன்பிறகு இரண்டு வருடங்களாக குரூப்-4 தேர்வு அறிவிக்கப்படவில்லை.
2018 ஆகஸ்டில் வெளியிடப்பட்ட குரூப்-2 இன்டர்வூயு போஸ்டுக்கான தேர்வு அறிவிப்பிற்கு பிறகு 3 வருடங்களாக தேர்வு அறிவிப்பில்லை.
2017 ஏப்ரலில் வெளியிடப்பட்ட குரூப்-2 NON இன்டர்வூயு போஸ்டுக்கான தேர்வு அறிவிப்பிற்கு பிறகு 4 வருடங்களாக எந்த அறிவிப்புமில்லை.
கொரானா காரணமாக ஓய்வூதிய வயது58 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்தத் தேர்வும் அறிவிக்கப்படாது என இளைஞர்களின் மனதில் ஐயம் எழுகிறது.
இந்த நிலையினால் அரசுப்பணியினை எதிர்பார்த்து அரசுப்பணியாளர் தேர்வுக்கு தயாராகும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வயது முதிர்ந்தவர்கள் ஓய்வுபெற்றால்தான் காலிப்பணியிடம் உருவாகும் . காலிப்பணியிடம் உருவானால்தான் அரசுப்பணியாளர் தேர்வுகள் அறிவிக்கப்படும்.
அரசுப்பணியாளர் தேர்வாணையத்தை நம்பி அரசுப்பணிக்கு தயாராகும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு
ஓய்வு வயதை60லிருந்து 58 ஆகக் குறைக்கப்பட வேண்டும்.
பேரிடர்காலத்தில் வேலைவாய்ப்பின்மையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் காப்பாற்றிடவும், அரசுப்பணியாளர் தேர்வாணையம் மேலும் இரண்டு வருடங்களுக்கு முடங்கிவிடாமல் தேர்வுகள் நடைபெற ஓய்வு வயதை 60 லிருந்து58 ஆகக் குறைக்க வேண்டும்.
இளைஞர்களின் எழுச்சியே நாட்டின்
வளர்ச்சி!!!
இலட்சக்கணக்கான இளைஞர்களின் குடும்பங்களின் வாழ்வில் ஔியேற்றிட வேண்டுமானால் ஓய்வு வயது 60 லிருந்து 58 ஆகக் குறைக்க வேண்டும்.
இலட்சக்கணக்கான இளைஞர்களை மேலும் இரண்டு வருடங்களுக்கு முடங்கிவிடாமல் கனவுகளை நனவாக்குங்கள்.
இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 2006 -ல் திராவிட முன்னேற்ற கழக அரசு பதவியேற்றவுடன் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் TNPSC-யை புத்துயிர் ஊட்டியது போன்று, ஓய்வு வயதை மீண்டும் 60லிருந்து 58 ஆகக் குறைத்து இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் ஔியேற்ற வேண்டும்.
இளைஞர்களின் மனதிலும்உதய சூரியன் உதயமாக வேண்டும்.7*

கருத்துகள்
கருத்துரையிடுக