New SP Reported in Tenkasi District
தென்காசி மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
தென்காசி மாவட்டத்தில் முதல் காவல் கண்காணிப்பாளராக திரு. சுகுண சிங் IPS அவர்கள் பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. R.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் இன்று (08.06.2021) பதவி ஏற்றுக்கொண்டார். நமது காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர், இவர் 2015 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து, காஞ்சிபுரம் மற்றும் தேவகோட்டை உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளர்(ASP) ஆகவும். பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர் காவல் துறையில் சென்னை வடக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர்(DCP) ஆகவும், திருவல்லிக்கேணி மற்றும் மாதாவரத்தில் காவல் துணை ஆணையராகவும்(DCP) பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் செயப்படும் 9385678039 என்ற தொடர்பு அறிமுகப்படுத்தியுள்ளார். ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் தங்களின் அவர்களுக்கு நேரடியாக காவல் நிலையம் செல்ல முடியாத இருப்பதால் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களின் புகாரினை தெரிவித்தால் மக்களை நோக்கி தென்காசி மாவட்ட காவல்துறை என்ற திட்டத்தின் மூலம் காவல்துறையினர் இருப்பிடத்திற்கே வந்து புகார் மனு மீது விசாரணை நடத்தி தீர்வு வழங்குவர் எனவும் குழந்தைகள்,பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிராக செய்யப்படும் குற்றங்களுக்கு உடனடியாக செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் ..
கருத்துகள்
கருத்துரையிடுக