சூப்பர் செய்தி அகவிலைப்படி 28 %-லிருந்து 31%ஆக உயரும்



 1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி செப்டம்பர் மாத இறுதியில் வரும் சம்பளத்தில் சேர்க்கப்படும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், மூன்று டி.ஏ. தவணைகளும் இந்த சம்பளத்தில் வழங்கப்படும். ஊழியர்களுக்கான நல்ல செய்தி இதோடு முடியவில்லை. அகவிலைப்படி மீண்டும் ஒரு முறை அதிகரிக்கப்படலாம்.


ஜூன் மாதத்திற்கான 3% டிஏ அதிகரிப்பு


ஜூன் 2021 க்கான அகவிலைப்படி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 2021 ஜனவரி முதல் மே வரையிலான AICPI தரவுகளிலிருந்து 3% அகவிலைப்படி மேலும் அதிகரிக்கப்படும் என்பது தெளிவாகிறது.


இது விரைவில் அறிவிக்கப்படும் என்று ஜேசிஎம் செயலாளர் (பணியாளர்கள் பக்கம்) சிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இருப்பினும், அது எப்போது செலுத்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 3 சதவீதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும். ஆகையால் ஊழியர்களின் ஊதியம் மீண்டும் ஒரு முறை அதிகரிக்கும் என்பது உறுதி.


2020 ஜனவரியில், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. பின்னர் 2020 ஜூன் மாதத்தில் 3 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர், இது 2021 ஜனவரியில் 4 சதவீதம் அதிகரித்தது. அதாவது, இந்த மூன்று அதிகரிப்புகளால் அகவிலைப்படி 11% அதிகரித்துள்ளது. இப்போது அது 28% ஐ எட்டியுள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும் (17 + 4 + 3 + 4 + 3).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021