ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Aswin)
பெயர் : ரவிச்சந்திரன் அஸ்வின்
பிறப்பு : 17-09-1986
பெற்றோர் : ரவிச்சந்திரன், சித்ரா
இடம் : சென்னை, தமிழ்நாடு
வகித்த பதவி : கிரிக்கெட் வீரர்
விருதுகள் : அர்ஜுனா விருது, சர் கார்பீல்டு சொபர்ஸ் விருது, ஐசிசி தொடர் ஆட்டக்காரர் விருது
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஆடுகிறார். இவரும், இலங்கையைச் சேர்ந்த அஜந்த மென்டிஸ் மட்டுமே தற்போது கேரம் பந்து(carrom ball) அல்லது சொடுக்கு பந்து எனப்படும் வகையான சுழற்பந்தை வீசும் திறன் கொண்டவர்கள். தன்னுடைய பந்து வீசும் முறைக்கு சொடுக்கு பந்து என்ற பதத்தை பயன்படுத்தியவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
2011 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 61 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2011-ல், இந்தியத் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2010/11 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

கருத்துகள்
கருத்துரையிடுக