இது பெண் பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, ஆண் பிள்ளைகளுக்கும் நடக்கிறது. குழந்தைகளை கூட காமவெறியோடு தான் பார்க்கிறார்கள்.

 


உலகில் மாம்சத்தின் போராட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. தன் குடும்பத்தின் நபர்களை கூட தூய்மையான அன்போடு பழக முடியாத மிருகங்களாக மனிதர்கள் மாறி வருகிறார்கள். 


வெளிப்புறத்தில் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறையாக, ஒன்றும் தெரியாத அப்பாவியாக இருப்பார்கள், ஆனால் இரகசிய பாவங்களில் மீள முடியாமல் சிக்கி இருப்பார்கள். 


ஆபாசபடம் பார்ப்பது, தவறான உறவில் இருப்பது போன்றவற்றால் அவர்களுடைய மனசாட்சி கல்லாக இருக்கும். சரி/தவறு என எதுவும் நிதானிக்க தெரியாது. மாம்சத்தின் படியே நடப்பார்கள். 


இவர்களின் கண் பச்சிளம் பிள்ளை என்றும் பார்க்காது.  மனிதனை விட கொடுமையான மிருகம் வேறு எதுவும் இருக்காது. 


பாவம் செய்கிற எவனும் பிசாசினால் உண்டாகி இருக்கிறான் என இயேசு கிறிஸ்து சொன்னது போல, அவர்களுடைய ஆத்துமாவில் பிசாசு தன்  வார்த்தைகளை தூவி இருக்கிறான். 


அவர்கள் பிசாசை போலவே நடப்பார்கள். பிசாசுக்கு ஆயத்தம் செய்யப்பட்டு இருக்கும் அக்கினிகடலில் நிச்சயம் தள்ளப்படுவார்கள். அது பாவத்தில் மூழ்கிய யாவற்றையும் விறகு போல  எண்ணி எரிக்கிறது.


இன்று பரிசுத்த ஆவியானவர் நம்மை சுத்தம் செய்ய விரும்புகிறார். பிசாசின் கிரியைகளை அழிக்கவே தேவனுடைய குமாரன் வந்தார். 


நாம் அந்த கொடுமையான அக்கினி கடலிலே விழாதபடி இயேசு நம்மை இன்றே சுத்தம் செய்கிறார். 


ஆனால் அவரிடம் அடங்கி இருக்காமல், அவரோடு சேராமல், திரியவிரும்புவோர் மீது தேவனுடைய கோபம் தங்கும். 


இந்த பொல்லாத உலகத்திடம் இருந்து நம் பிள்ளைகளை பாதுகாப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021