ஆதாரில் மொபைல் எண் மாற்ற, புகைப்படம்மாற்ற என்ன செய்யவேண்டும் முழு விவரம்...


ஆதார் கார்டில் புகைப்படம் மாற்ற 

ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் பெரும்பாலும் தெளிவு இல்லாமல் இருக்கும். அந்த புகைப்படத்தை எப்படி மாற்ற வேண்டும் 


ஆதாரில் பெயர், முகவரி போன்ற திருத்தங்களை ஆன்லைன் மூலமாகவே செய்யலாம். ஆனால், புகைப்படத்தை மாற்றுவதற்கு ஆதார் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும். 


ஆதார் சேவை  மையம் சென்று ஆதாரில் உள்ள புகைபடத்தை மாற்ற வேண்டும் என கூறினால்  அங்கு என்ரோல்மெண்ட் படிவம் ஒன்று கொடுப்பார்கள்  


அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஆதார் சேவை மையத்தில் வழங்க வேண்டும் . 


அடுத்து அங்கு உங்களது கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவுசெய்து புதிய புகைபடமும் எடுப்பார்கள் பிறகு ஆதாரில் உங்கள் புதிய புகைப்படம்  அப்டேட் செய்யப்படும் . 


இதற்கு  கட்டணம் வசூலிக்கப்படும் . ஆதாரில் போட்டோ அப்டேட் செய்ததற்கான எண்ணும், அதற்கான ரசீதும் உங்களுக்கு வழங்கப்படும் . 


அந்த நம்பரை வைத்து உங்களது அப்டேட் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் . போட்டோ அப்டேட் ஆனவுடன் புதிய ஆதார் கார்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம் 


ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண் மாற்ற


ஆதாரில் பெயர், முகவரி போன்ற திருத்தங்களை ஆன்லைன் மூலமாகவே செய்யலாம். ஆனால், மொபைல் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும். 


ஆதார் உடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண் தொலைந்து போயிருந்தால் அல்லது வேறு எண்ணை இணைக்க விரும்பினால், நீங்கள் ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று தான் புதிய எண் பதிவு செய்ய முடியும் வேறு வழியே இல்லை.


அதற்க்கு நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள ஆதார் செணடர் அல்லது உங்கள் பகுதியில் உள்ள தாலுக்கா அலுவலகம் அல்லது ஆதார் மையம் சென்றுதான் மாற்றமுடியும்


அங்கு உங்களுக்கு விண்ணப்பம் வழங்கபடும் அதில் உங்கள் சரியான தகவலுடன் அதை நிரப்பவும்.பூர்த்தி செய்து கொடுத்து உங்கள் மொபைல் எண்ணை மாற்றம் செய்து கொள்ளலாம்


இதற்கு  கட்டணம் வசூலிக்கப்படும் . ஆதாரில் மொபைல் எண் மாற்றம் செய்ததற்கான எண்ணும், அதற்கான ரசீதும் உங்களுக்கு வழங்கப்படும் . 


அந்த நம்பரை வைத்து உங்களது அப்டேட் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் . புதிய ஆதார் கார்டை ஆன்லைனில் டவுன்லோடு செய்துகொள்ளலாம் 


ஆதார் கார்டில் உள்ள முகவரியை எந்த ஆவணமும் இல்லாமால் மாற்ற


ஆதாரில் முகவரி திருத்தங்களை ஆன்லைன் மூலமாகவே செய்யலாம். ஆனால், அதற்க்கு உங்கள் முகவரிக்கு  ஆவணம் தேவை ஆனால் உங்களிடம் சரியான ஆவணம் இல்லை என்றால் நீங்கள் செய்யவேண்டியது என்ன  


நீங்கள் ஆதார் சேவை  மையம் சென்று ஆதாரில் உள்ள முகவரியை மாற்ற வேண்டும் என கூறினால்  அங்கு என்ரோல்மெண்ட் படிவம் ஒன்று கொடுப்பார்கள்  


அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஆதார் சேவை மையத்தில் வழங்க வேண்டும் . 


அடுத்து அங்கு உங்களது கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவுசெய்து புதிய புகைபடமும் எடுப்பார்கள் பிறகு ஆதாரில் உங்கள் புதிய முகவரி  அப்டேட் செய்யப்படும் . 


இதற்கு  கட்டணம் வசூலிக்கப்படும் . ஆதாரில் முகவரி  அப்டேட் செய்ததற்கான எண்ணும், அதற்கான ரசீதும் உங்களுக்கு வழங்கப்படும் . 


அந்த நம்பரை வைத்து உங்களது அப்டேட் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் . முகவரி அப்டேட் ஆனவுடன் புதிய ஆதார் கார்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021