வி. சாந்தா (V.SANTHA)
பெயர் : வி. சாந்தா
பிறப்பு : 11-03-1927
இடம் : மயிலாப்பூர், சென்னை
புத்தகங்கள் : My Journey, Memories, V Shanta
வகித்த பதவி : புற்றுநோய் மருத்துவர்
விருதுகள் : பத்ம விபூஷன்,பத்மஶ்ரீ,பத்ம பூஷன்,மக்சேசே விருது
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
மருத்துவர் வி. சாந்தா இந்தியாவின் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர். இவர் சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார். அடையாறு புற்றுநோய்க் கழகத்தில் 1955 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இவர், அதில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப் பணியாற்றினார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
இளமை வாழ்க்கை:
சென்னையில் மைலாப்பூரில் பிறந்தவர் சாந்தா, பி. எஸ். சிவசாமி பெண்கள் உயர் பள்ளியில் கல்வி கற்ற இவர் 1949 இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1955 இல் எம்.டி பட்டம் பெற்றார்.
இவர் மக்சேசே விருது, பத்மஶ்ரீ, பத்ம விபூஷண்,பத்ம பூஷண், நாயுடம்மா நினைவு விருது (2010), தமிழக அரசின் ஔவையார் விருது (2013) போன்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். My Journey, Memories, V Shanta எனும் நூல், தமிழில் பத்மநாராயணன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக