நாராயண் கார்த்திகேயன் (Narayan Karthikeyan)
பெயர் : நாராயண் கார்த்திகேயன்
பிறப்பு : 14-01-1977
பெற்றோர் : ஜி. கார்த்திகேயன், ஷீலா நாயுடு
இடம் : கோயம்புத்தூர், தமிழ் நாடு
வகித்த பதவி : கார் பந்தய வீரர்
விருதுகள் : பத்மஶ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது, தாதா சாகேப் பால்கே விருது
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேர்ந்தவருமான இவர், உலக மோட்டார் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொண்ட முதல், மற்றும் ஒரே இந்தியர் ஆவார். இவர் தற்போதைய வருடத்திய எஃப் 1 போட்டிகளில் ஜோர்டான் அணியின் சார்பாக பங்கு கொண்டு வருகிறார். 2010-ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஶ்ரீ விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது.
வாழ்க்கைச் சுருக்கம் :
நாராயண் கார்த்திகேயனின் தந்தை ஜி. கார்த்திகேயனும் ஒரு கார் பந்தய வீரராவார். தன் தந்தையின் பாதிப்பில் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆவல் இளமையிலேயே பெறப்பட்ட நாராயண், இந்திய ராலி பந்தயங்களில் பங்கு கொள்ளத் தொடங்கினார். ஶ்ரீபெரும்புதூரில் நடந்த முதல் போட்டியிலேயே முதல் மூன்று வீரர்களுள் ஒருவராக வெற்றி பெற்றார். அதன் பிறகு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்கிருந்த எல்ஃப் வின்பீல்ட் பந்தயப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். 1992இல் அங்கு நடந்த பார்முலா ரெனால்ட் கார்களுக்கான பைலட் எல்ப் போட்டிகளில் அரை இறுதிச் சுற்று வரை வந்தார். பின்னர் 1993ல் இந்தியாவில் பார்முலா மாருதி பந்தயங்களிலும், பிரிட்டனில் பார்முலா வாக்ஸ்ஹால் இளைஞர் பந்தயங்களிலும் கலந்து கொண்டார். 1994ல் பார்முலா ஜீடெக் பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓட்டினார். அதன் பிறகு பிரிட்டிஷ் பார்முலா போர்டு குளிர்கால பந்தயங்களில் கலந்து கொண்டு ஐரோப்பாவில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 1995ல் பார்முலா ஆசியா பந்தயங்களில் கலந்து கொண்ட நாராயண் கார்த்திகேயன், மலேசியாவில் நடந்த போட்டியில் இரண்டாமிடத்தில் முடித்தார். 1996ல் பார்முலா ஆசியா பந்தயங்களிலேயே முதல் வீரராக வந்து இப்பந்தயங்களிலேயே முதலில் வந்த முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார். 1997இல் பிரிட்டிஷ் பார்முலா ஓபன் பந்தயங்களில் கலந்து கொண்டு ஆறாம் இடத்தில் முடித்தார்.
2001ல் பார்முலா நிப்பான் F3000 பந்தயங்களில் கலந்து கொண்ட நாராயண் கார்த்திகேயன், முதல் பத்து வீரர்களுள் ஒருவராக முடித்தார். அதே வருடத்தில் ஜாகுவார் ரேஸிங் காரை பரிசோதனை ஓட்டம் செய்த அவர் எஃப் 1 கார் ஓட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதன் பிறகு ஜோர்டான் ஹோண்டா எஃப் 1 காரையும் பரிசோதித்தார்.
2002ல் டாடா RC அணியின் சார்பாக டெலிஃபோனிகா பந்தயங்களிலும், 2003ல் நிஸ்ஸான் பந்தயங்களிலும் கலந்து கொண்டார். அவ்வருடம் இரண்டு போட்டிகளில் முதலிடம் வகித்து பந்தயங்களில் நான்காம் இடத்தைப் பிடித்தார். அவ்வருடம் மினார்டி எஃப் 1 அணிக்கு பரிசோதனை ஓட்டமும் நடத்தினார். 2004ல் எஃப் 1 பந்தயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் போதுமான விளம்பரதாரர்கள் இல்லாத காரணத்தால் அவரால் அவ்வருடம் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும், அவ்வருடம் நிஸ்ஸான் பந்தயங்களில் கலந்து கொண்டு ஸ்பெயினிலும், பிரான்சிலும் வெற்றி பெற்றார்.

கருத்துகள்
கருத்துரையிடுக