மாரியப்பன் தங்கவேல் (Mariappan Thangavel)

 


பெயர் : மாரியப்பன் தங்கவேல்

பிறப்பு : 28-06-1995

பெற்றோர் : தங்கவேல், சரோஜா

இடம் : வடகம்பட்டி, சேலம் மாவட்டம், தமிழ்நாடு

வகித்த பதவி : தடகள விளையாட்டு வீரர்

விருதுகள் : பத்மஶ்ரீ விருது

 

 

வரலாறு:-வாழ்க்கை வரலாறு

 

இந்திய மாற்றுத்திறனாளர். தடகள விளையாட்டு வீரர் ஆவார். தமிழ்நாட்டு விளையாட்டு வீரரான இவர் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார். இரியோ டி ஜெனீரோவில் நடந்த 2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி42 வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

 

வாழ்க்கைக் குறிப்பு

 

மாரியப்பன் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர். தனது ஐந்தாவது அகவையில் பள்ளி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் பேருந்து வலது காலில் ஏறி முழங்காலுக்குக் கீழே காலை இழந்தார். காய்கனி விற்று வாழ்க்கை நடத்தும் அவரது அன்னை அவரது மருத்துவச் செலவிற்காக ரூ.3 இலட்சம் கடன் பெற்று அதனைத் திருப்புவதற்கு அல்லற்பட்டு வந்தார். தனது காலை இழந்தநிலையிலும் மாரியப்பனுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது. 2013 தேசிய மாற்றுத்திறனாளர் போட்டிகளில் கலந்து கொண்ட மாரியப்பனை கண்ட பயிற்றுநர் சத்தியநாராயணா தமது பயிற்சிக்கு ஏற்றுக் கொண்டார். 2015இல் பெங்களூருவில் அவரது பயிற்சி மையத்தில் இணைந்தார்.

 

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் துனிசியாவில் நடந்த ஐபிசி கிராண் பிரீ போட்டியில் 1.78 மீ தாண்டி ரியோ மாற்று திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றார். தங்கப் பதக்கம் வென்றதால் இவருக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்க இருக்கிறது. அத்துடன் தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது. தனக்கு அறிவிக்கப்படும் பரிசுத்தொகைகளிலிருந்து தான் படித்த அரசு பள்ளிக்கூடத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். இவருக்கு மை ஸ்டாம்ப் என்ற திட்டத்தின்கீழ் சேலம் தபால் துறை சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. 2016 - ஆனந்த விகடன்டாப் 10’ மனிதர்கள் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021