கோ. நம்மாழ்வார் (Nammalvar)

 


பெயர் : கோ. நம்மாழ்வார்

பிறப்பு : 06-04-1938

இறப்பு : 30-12-2013

பெற்றோர் : ச. கோவிந்தசாமி

இடம் : இளங்காடு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்

புத்தகங்கள் : தாய் மண், உழவுக்கும் உண்டு வரலாறு, நெல்லைக் காப்போம், வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

வகித்த பதவி : இயற்கை அறிவியலாளர்

விருதுகள் : சுற்றுச் சூழல் சுடரொளி விருது



வரலாறு:-வாழ்க்கை வரலாறு


இவர் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.


வாழ்க்கைக் குறிப்பு :


நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 1938-இல் பிறந்தார். தந்தை பெயர் ச. கோவிந்தசாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007இல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021