ரூபா தேவி (Rupa Devi)
பெயர் : ரூபா தேவி
பிறப்பு : 25-03-1989
பெற்றோர் : குருசாமி
இடம் : திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு
வகித்த பதவி : கால்பந்து விளையாட்டு வீரர்
விருதுகள் : சக்தி விருது
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
ரூபா தேவி, 25 மார்ச் 1989ல் பிறந்தார். தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக தனது விளையாட்டு வாழ்க்கையை துவக்கியவர். 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவின் நடுவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், தமிழகத்தில் இருந்து, ஃபிஃபா கால்பந்து நடுவராக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ரூபா தேவி பெற்றார். இதுவரை, ஃபிஃபா அமைப்பின் பெண் நடுவர்களாக இந்திய பெண்கள் ஐவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ரூபா தேவியின் விளையாட்டு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செலவுகளையும் திண்டுக்கல் கால்பந்து அமைப்பு கவனித்துக் கொண்டது. பி.எஸ்.சி மற்றும் பி.எட். கல்வியை பூர்த்தி செய்துள்ள ரூபா தேவி, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘சக்தி விருது’, ரெயின் டிராப்ஸ் நிறுவன விருது உள்பட பல விருதுகளை, தனது விளையாட்டு சாதனைகளுக்காக பெற்றுள்ளார்.

கருத்துகள்
கருத்துரையிடுக