சதீஷ் சிவலிங்கம் (Sathish Sivalingam)
பெயர் : சதீஷ் சிவலிங்கம்
பிறப்பு : 23-06-1992
பெற்றோர் : சிவலிங்கம், தெய்வானை
இடம் : சத்துவாச்சாரி, வேலூர், தமிழ்நாடு
வகித்த பதவி : பளுதூக்கும் வீரர்
விருதுகள் : அர்ஜுனா விருது
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
சதீஷ் சிவலிங்கம், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை சிவலிங்கம், தாய் தெய்வானை ஆவார்கள். இவர் நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் உள்ள அட்லஸ் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற சதீஷ் சிவலிங்கம், 2007ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்ந்து நாகராஜ் என்பவரிடம் பயிற்சி பெற்றார்.
இவர் ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2014 பொதுநல விளையாட்டுக்களில் பாரம் தூக்குதல் – ஆடவர் 77 கிலோ போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குனர் ஆவார்.
மத்திய அரசு இவருக்கு 2015-ல் அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது. தமிழகத்தில் இருந்து இந்த விருதை பெறும் 9-வது பளு தூக்குதல் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

கருத்துகள்
கருத்துரையிடுக