சிவசங்கர நாராயண பிள்ளை (Sivasankara Narayana Pillai)

 


பெயர் : சிவசங்கர நாராயண பிள்ளை

இயற்பெயர் : எஸ்.எஸ். பிள்ளை

பிறப்பு : 05-04-1907

இறப்பு : 31-08-1950

இடம் : செங்கோட்டை, தமிழ்நாடு

வகித்த பதவி : கணித மேதை, பேராசிரியர்



வரலாறு:-வாழ்க்கை வரலாறு


டாக்டர் எஸ்.எஸ். பிள்ளை அவர்கள் தொடக்க கல்வியை இலத்தூரில் கற்றார். அப்போது அவருடைய ஆசிரியர் சாஸ்தியார், அவருடைய கணிதத் திறமையைப் பார்த்து, அதிசயத்தார். திடீரென அவருடைய தந்தை இறந்ததும் அவர் பள்ளிக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். ஆனால், ஆசிரியர் சாஸ்திரியார் அவரை அணுகித் தொடர்ந்து படிக்க வற்புறுத்தியது மட்டுமல்லாமல், வறுமையிலிருந்த சாஸ்திரியாரே தனது சொற்ப வருமானத்திலிருந்து ஒரு தொகையை அவரின் கல்விக்காகச் செலவழித்து வந்தார்.


சாஸ்திரியாரின் கனவு வீண் போகாமல் தொடர்ந்து செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் எஸ்.எஸ். பிள்ளை வெற்றியடைந்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில், இன்டர் மீடியட் முடித்து, பின் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் கணிதத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார்.


1929ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர் ஆனார். இவ்வேளையில், எண் கணித ஆராய்ச்சியில் (Number Theory) டாக்டர் பட்டம் பெற்றார். இந்தியாவிலேயே முதன் முதலில் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர், டாக்டர் S.S. பிள்ளை அவர்களே! என்ற தனிப்பெருமையும் இவருக்குண்டு. உலக அளவில் அவருக்கு Theroy of Numbers' என்னும் எண் கணித ஆராய்ச்சி, பெரும் புகழைத் தந்தது.


இந்த எண் கணிதக் கோட்பாட்டை 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டபாஃபேன்டைன் (Dephantine) என்னும் கணித மேதை முதலில் ஆராயத் தொடங்கினார். பின்னர் பலநூற்றாண்டுகளாக இக்கோட்பாடு படிப்படியாக விளக்கம் பெற்று வந்தது. வாரிங்ஸ் (Prof. Warings) இது சம்பந்தமாக ஒரு கணிதப் புதிரையும் வழங்கி விடையையும் கண்டார். ஆனால், விடையைத் தெரியும் அவருக்கு அதனை அடையும் வழி முறையைத் தெரியவில்லை. அதற்கான விடையைக் காண 300 ஆண்டுகள் கணித மேதைகள் தனியாகவும், கூட்டாகவும் ஆராய்ச்சி செய்தும் வெற்றியடைய முடியாது போய்விட்டது.


10-2-1936 அன்று 29 வயதான டாக்டர். S.S. பிள்ளை ஐந்து ஆண்டுகள் தன்னந்தனியாக உழைத்து, Warings பிரச்சனைக்கு விடை கண்டார். அன்று, தாம் சீனிவாசராமானுஜத்தின் வாரிசுதான் என்பதை உறுதி செய்தார். இது தொடர்பாக Dr. Pillai's Theory of Numbers என்ற ஒரு கோட்பாட்டுக் கணித நூலை வெளியிட்டு, கணித உலகில் நிரந்தரமான இடத்தைப் பெற்றார். இது போன்று, கணித மேதைகளைக் கடந்த 400 ஆண்டுகளாக மிரட்டிக் கொண்டு இருந்த Fourier Series என்ற கடினமான புதிரை விடுவித்து, மீண்டும் புகழின் உச்சிக்குச் சென்றார்.


இதனால், உலகப்புகழ் பெற்ற டாக்டர். ஐன்ஸ்டீனும், டாக்டர். ஓபன் ஹைமரும் (Opper heimer) தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட அழைப்பு விடுத்தனர். ஆனால், டாக்டர் S.S. பிள்ளை அவர்கள் இந்தியாவிலேயே இருந்து தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார். ஆனால், 1950இல் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற உலகக் கணித மகாநாட்டிற்குத் தலைமை ஏற்கவும் அதன்பின், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்திலிருந்து டாக்டர். ஐன்ஸ்டீனுடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்ய முடிவு செய்து, 30-8-1950இல் ‘Star of Mary Land’ என்ற விமானத்தில் புறப்பட்டார் செல்லும் வழியில் கெய்ரோவில் விமானம் இறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின், மீண்டும் புறப்பட்டது. 31-08-1950அன்று அதிகாலை 3 மணிக்கு விமானம் சகாரா பாலைவனத்தின் மீது பறந்த போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலானது. சான்பிரான்சிஸ்கோ மகாநாட்டில் பங்கு கொண்ட கணித மேதைகள் டாக்டர் பிள்ளைக்குப் புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021