வாசுதேவன் பாஸ்கரன் (Vasudevan Baskaran)

 


பெயர் : வாசுதேவன் பாஸ்கரன்

பிறப்பு : 17-08-1950

பெற்றோர் : வாசுதேவன், பத்மாவதி

இடம் : ஆரணி, சென்னை, தமிழ்நாடு

வகித்த பதவி : வளைத்தடி பந்தாட்ட வீரர்

விருதுகள் : பத்மஶ்ரீ விருது, அர்ஜுனா விருது

 

 

வரலாறு:-வாழ்க்கை வரலாறு

 

வாசுதேவன் பாஸ்கரன், பிறந்த ஊர் ஆரணி ஆகும். இவரது தந்தை வாசுதேவன் மற்றும் தாய் பத்மாவதி ஆவர். இவர் தமது படிப்பை வெஸ்லி பள்ளியிலும், லயோலா கல்லூரியிலும் மேற்கொண்டார்.

 

வாசுதேவன் பாஸ்கரன், ஒரு சிறந்த வளைத்தடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர். இவர் மாஸ்கோவில் நடந்த 1980- ஒலிம்பிக் விளையாட்டில் இந்திய தேசிய அணியின் தலைவராக விளையாடினார். இந்த அணி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது. 1979-1980 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதைப் பெற்றார்.

 

இவர் 11 வயதில் வளைத்தடிப் பந்தாட்டத்தை விளையாட ஆரம்பித்தார். அகில இந்திய பள்ளி அணியில் இடம்பெற்றார். கல்லூரி நாளில் பல்கலைக்கழக அணிக்காக ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயணம் செய்து இந்திய பல்கலைக்கழக அணிக்காக விளையாடினார். இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடினார். 2 உலகப் போட்டிகள், 2 ஒலிம்பிக் போட்டிகள், 2 ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1980-இல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அணிக்கு தலைமை வகித்து, தங்கப் பதக்கம் பெற்று தாயகம் திரும்பினார்.இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மஶ்ரீ விருது இவருக்கு கிடைத்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021