27 ஆண்டுகால திருமணத்தை முறித்து கொண்ட பில்கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் தம்பதி!
வாஷிங்டன்:
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் - மெலிண்டா
கேட்ஸ் தம்பதி 27 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து மூலம்
தங்களது திருமண உறவை முறித்து
கொண்டனர். இதை நீதிமன்றமும் உறுதி
செய்தது.
அமெரிக்காவின்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும்
நிறுவனருமான பில்கேட்ஸ். இவரது மனைவி மெலிண்டா
கேட்ஸ். இந்த தம்பதிக்கு 27 ஆண்டுகளுக்கு
முன்னர் திருமணம் நடைபெற்றது. கடந்த
1975 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் என்ற
நிறுவனத்தை பில்கேட்ஸ் தொடங்கினார். அப்போது அதன் சிஇஓவாக
செயல்பட்டார்.
Bill Gates and Melinda Gates divorced after 27 years
அந்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டாவை
சந்தித்த அவர் காதலித்து அவரை
ஹவாய் தீவுகளில் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு மெலிண்டா
பெயரில் அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வந்தார்.
இதன் மூலம் கல்வி, சுகாதாரம்
ஆகிய பணிகல் மேற்கொள்ளப்பட்டன. இந்த
நிலையில் இவர்கள் விவாகரத்து செய்ய
முடிவு செய்தனர்.
இதுகுறித்து
கடந்த மே மாதம் அறிவித்தனர்.
இதுகுறித்து பில் கேட்ஸ் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை
வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து
செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி அதனால் அனைத்து
தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான
வழிகள் செய்து வரப்பட்டுள்ளன.
இந்த பணியில் இணைந்து தொடர
இருக்கிறோம். எங்களது திருமண வாழ்வை
முடித்து கொள்ள நீங்கள் முடிவு
செய்துள்ளோம். எங்கள் வாழ்வின் அடுத்த
கட்டத்தில் ஒன்றாக இணைந்து தம்பதியாக
வளர்ச்சி காண்போம் என நம்பிக்கை
எங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விவாகரத்துக்கான மனுவை
வாஷிங்டன் நகரில் உள்ள கிங்
கவுன்டி நீதிமன்றத்தில் மெலிண்டா தாக்கல் செய்தார்.
இதையடுத்து இவர்களது விவாகரத்தை நீதிமன்றம்
உறுதி செய்தது. விவாகரத்து கோரி
நீதிமன்றத்தை நாடினால் 90 நாட்களுக்கு பிறகு அது அதிகாரப்பூர்வமாக
வழங்கப்படும்.

கருத்துகள்
கருத்துரையிடுக