புதுசா ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? Apply Smart Ration Card Online

 


ரேஷன் கார்டு என்பது அனைத்து குடும்பங்களிடமும் இருக்க வேண்டிய அடிப்படை மற்றும் தேவையான ஒரு ஆவணம் ஆகும். ஆன்லைன் முறை மூலம் ஸ்மார்ட் ரேஷன் கார்டைப் பெறுவதற்கான புதிய முறையையும், tnpds.gov.in எனும் தமிழக பொது விநியோக அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரேஷன் கார்டு ஆன்லைன் விண்ணப்ப சேவை 2016 முதல் நடைமுறையில் உள்ளது, இது மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.


TNPDS வலைத்தளத்தில் ஆன்லைன் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான படிப்படியான நடைமுறை இங்கே:


www.tnpds.gov.in எனும் தமிழ்நாடு பொது விநியோக அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்குச் செல்லவும்

முகப்புப்பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள “மின்னணு அட்டை சேவைகள்” (Smart Card Applications Services) எனும் பிரிவின் கீழ் உள்ள “மின்னணு அட்டை விண்ணப்பிக்க” (Smart Card Application) என்பதைக் கிளிக் செய்க.

அதைக் கிளிக் செய்த பிறகு, விண்ணப்ப படிவத்துடன் ஒரு புதிய பக்கம் தோன்றும்.

மேல் இடதுபுறத்தில் புதிய மின்னணு அட்டைக்கான விண்ணப்பம் மற்றும் பழைய குடும்ப அட்டை பதிவு என்ற இரண்டு விருப்பங்கள் தோன்றும்.

அதில் புதிய குடும்ப அட்டையைப் பெற புதிய மின்னணு அட்டைக்கான விண்ணப்பம் எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்

அடுத்து, குடும்ப தலைவர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி ஆகிய விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளிட வேண்டும்.

அடுத்து குடும்ப தலைவரின் புகைப்படத்தை 5.0 MB க்குள் jpeg, jpg, png போன்ற வடிவங்களில் பதிவேற்ற வேண்டும்.

அடுத்ததாக, மாவட்டம், மண்டலம்/ வட்டம், கிராமம், அஞ்சல் குறியீடு, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களைச் சரியாக உள்ளிட வேண்டும்.

அடுத்ததாக “உறுப்பினரை சேர்க்க” எனும் விருப்பத்தைக் கிளிக் செய்து உங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, உறவு முறை ஆகியவற்றைச் சரியாக ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும்.

அடுத்ததாக, என்ன வகையான குடும்ப அட்டை வேண்டும் என்பதை தேர்வுச் செய்ய வேண்டும். அங்கு உங்களுக்கு

பண்டகமில்லா அட்டை,

சர்க்கரை அட்டை,

அரிசி அட்டை,

மற்றவை என நான்கு விருப்பங்கள் இருக்கும்.

மற்றவை என்பதை நீங்கள் தேர்வுச் செய்தால்

காவலர் அட்டை,

சிறைத்துறை அட்டை,

வனத்துறை அட்டை

ஆகியவற்றில் உங்களுக்கு ஏற்ற ஒன்றைத் தேர்வுச் செய்ய வேண்டும்.

அடுத்ததாக குடியிருப்பு சான்றாக ஏதேனும் வீட்டின் சரியான முகவரி உள்ள ஒரு அடையாள அட்டையை நீங்கள் பதிவேற்ற வேண்டும்.

அடுத்து, உங்களிடம் எரிவாயு இணைப்பு உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும். உள்ளதென்றால் அதன் விவரங்களை உள்ளிட்ட வேண்டும்.

மேற்சொன்ன அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு சரிபார்த்து, உறுபடுத்தல் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

முடிந்ததும், பதிவு செய் எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் பதிவு செய்ததும், reference number கிடைக்கும்.

அதை வைத்து உங்கள் புதிய குடும்ப அட்டைக்கான நிலையைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு ஏதேனும் சந்தேகமோ அல்லது கேள்விகளோ இருந்தால், 1967 / 1800-425-5901 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புக்கொண்டு தெளிவு பெறலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021