பில்கேட்ஸ் (BILLGATES)
பெயர் : பில்கேட்ஸ்
பிறப்பு : 28-10-1955
பெற்றோர் : வில்லியம் ஹெச் கேட்ஸ், மேரி மேக்ஸ்வெல்
இடம் : அமெரிக்கா
வகித்த பதவி : Microsoft நிறுவனர்
வரலாறு:-பில்கேட்ஸ்
📺இன்றைய காலக்கட்டத்தில் உலகமே கணினி மயமாகிவிட்டது. கணினி பயன்பாடு உலகமெங்கிலும் பரவலாக காணப்படுகிறது. கணினி இல்லையென்றால் பெரும்பான்மையானவர்களுக்கு இவ்வுலகில் வேலையே இல்லை என்ற நிலைதான் இப்போது உள்ளது.
📺மைக்ரோசாஃட் என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்களுக்கு நினைவுக்கு வருபவர் யார்? அவர்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரரும், 'கணினி உலகம்' என்ற வானத்தை வசப்படுத்தியவருமான பில்கேட்ஸ்.
📺பில்கேட்ஸ் என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்களே இருக்கமுடியாது. கடந்த இரண்டு தலைமுறைகளில் பில்கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் வேறு எவரும் இல்லை. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர் இவர்.
📺20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிலதிபரின் அர்த்தத்தை முழுமையாக, தனிநபராக மாற்றியவர் இவர். சிறிய இடம் ஒன்றில் சிறிய தொழில் ஒன்றை தொடங்கி பின் அதை இவ்வுலகின் மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த நிறுவனமாக மாற்றியவர்.
📺சிறுவயதிலிருந்தே கணினி மென்பொருள் துறையில் தன் விடாமுயற்சியினால் முன்னேறி வெற்றி வாகை சூடிய உலகக் கோடீஸ்வரர் எனப் பெயர் பெற்ற மைக்ரோசாஃட் அதிபர் பில்கேட்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி பார்ப்போம்...
📺1955ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாள் அமெரிக்காவில் சியாடில் (Seattle) என்ற ஓர் அழகிய அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் நகரில் பிறந்தார் வில்லியம் ஹென்றி பில்கேட்ஸ். அவருடைய தந்தை 'வில்லியம் ஹெச் கேட்ஸ்' ஒரு சிறந்த வழக்கறிஞர். தாயார் 'மேரி மேக்ஸ்வெல்' வாசிங்டன் (Washington) பல்கலைக்கழகத்தின் பள்ளி ஆசிரியர்.
📺இவர்களின் மகனான பில்கேட்ஸ் சிறு வயதிலேயே கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கினார். ஆரம்பத்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடைய பில்கேட்ஸ் தனிமையை அதிகம் விரும்புபவர். எப்போதுமே ஏதாவது ஒரு சிந்தனையில் ஈடுபட்டிருப்பார்.
📺சக வயது மாணவர்கள் விரைவுக் கார்களையும், திரைப்படங்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருக்க பில்கேட்ஸ் மட்டும் எண்களைப் பற்றியும், அவற்றின் மந்திரம் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பார். வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலேயே துளிர்விடத் துவங்கியது.
📺பில்கேட்ஸ் தனது 13வது வயதில் சியாடில் பகுதியில் சிறந்தப் பாடச்சாலையான லேக்சைட் பாடச்சாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் இவரது கணினி ஆர்வமும், திறமையும் ஆசிரியர்களால் அறியப்பட்டது. சிறு வயது முதலே மென்பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரானார். பாடச்சாலையில் முதலாவது மாணவனாக பில்கேட்ஸ் திகழ்ந்ததால் இவர் ஆசிரியர்களின் செல்ல மாணவனாக திகழ்ந்தார்.
பில்கேட்ஸின் கணினி திறமைக்கு கிடைத்த வாய்ப்பு :
📺அந்தக்காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கூடக் கணினி ஓர் ஆடம்பரப் பொருளாகவும், அனைவருக்கும் எட்டாத ஒரு கருவியாகவும் இருந்தது. அவ்வேளையில் லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டது. கணினி வாங்கப்பட்டதன் நோக்கமே மாணவர்கள் கணினி பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், அவர்களின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதற்கும் தான். பில்கேட்ஸ் இந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.
📺மேலும், கணினியின் மீது இவருக்கு இருந்த காதலால் கணினி நிரலை பயன்படுத்தி ஒரு விளையாட்டை உருவாக்க நினைத்தார். பில்கேட்ஸ் தான் நினைத்தப்படியே தனது முதல் கணினி நிரலை டிக்-டக்-டே விளையாட்டிற்காக எழுதினார்.
📺இந்த விளையாட்டானது பயனாளர்களை எளிய முறையில் கவர்ந்து கணினிக்கு முன் விளையாட தூண்டியது. கணினியின் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது. இதன்மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது.
📺அப்போது கணினியை நன்கு பயன்படுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் பில்கேட்ஸ் மற்றும் அவரது நண்பர் பால் ஆலனும் (Paul Allen) ஆவர். கணினிக் கல்வியைக் கற்பதில் இருவரும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். மேலும், இவர்கள் இருவரும் கணினித் தொழிற்பாடு பற்றிய நூல்களை எல்லாம் ஆர்வமாக தேடிப் படித்து ஆசிரியர்களே வியக்கும் வகையில் தங்களின் கணினி அறிவை வளர்த்துக் கொண்டார்கள்.
📺அதுமட்டுமின்றி புரோகிராமிங் (Programming) மொழியில் இவர்களுக்கு தனி வெறியே ஏற்பட்டுவிட்டது எனலாம். ஏனெனில் இரவு, பகல் பார்க்காமல், பாடச்சாலை நேரத்திலும், விடுமுறையிலும் இருவரும் சேர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு கணினியில் புகுந்து விளையாடிப் பல புதுமைகளை காண விரும்பினார்கள்.
📺பில்கேட்ஸ் பாடச்சாலைக் கல்வியை முடித்தப்பிறகு மேற்படிப்பை தொடர்ந்து, அப்பாவைப்போல் வக்கீலாகி விட வேண்டும் என்று குடும்பத்தினரும், உறவினர்களும் வற்புறுத்தினர். ஆனால், பில்கேட்ஸின் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட கணினிக் கனவுகள், கணினி புரோகிராமிங்கையே சுற்றிச்சுற்றி வந்தன. இதன் பின்னர் பாடச்சாலை இறுதித் தேர்விலும் சிறப்பாக வெற்றி பெற்றார் பில்கேட்ஸ்.
📺பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க வக்கீல் கல்வியை அவரால் தொடர முடியாத நிலையில் இடைநிறுத்தி விட்டு பில்கேட்ஸ்-ம், அவரது நண்பர் பாலும் இணைந்து ஒரு கணினி நிறுவனத்தை ஆரம்பிப்பது பற்றி கனவு கண்டனர். அதற்காக நண்பர்கள் இருவரும் திட்டம் தீட்டினார்கள். தங்களின் கனவை செயல்படுத்துவதற்கு போதிய நிதி இல்லாததால் கணினி நிறுவனத்தை தொடங்குவது பற்றிய திட்டத்தை தள்ளிப்போட்டனர்.
📺அச்சமயத்தில் இன்டெல் (intel) நிறுவனம் புதிய Microprocessor-யை அறிமுகம் செய்தது. அதன் புரோகிராமிங் பணிக்கு அந்நிறுவனம் பில்கேட்ஸ் மற்றும் பால் இவர்களிடம் உதவியை நாடியது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் கணினியில் தேர்ச்சிப் பெற்ற அவர்கள் BASIC முறையில் புரோகிராமிங் எழுத ஆரம்பித்தனர்.
📺ஆனால், இப்பணியை 'விரைவாக, பிழையின்றி, மற்றவர்களை முந்திக்கொண்டு, சரியாக முடிக்க வேண்டும்' என்று எண்ணினார்கள். கடும் விடாமுயற்சியினால் எழுதப்பட்ட புரோகிராமிங்கானது இவர்கள் உழைத்த உழைப்பிற்கு வெற்றியை தேடித்தந்தது. இந்த வெற்றியின் திருப்புமுனை அவர்களை உலகறியச் செய்தது.
📺1975ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகக் கல்வி முற்று பெற்றப்பின் பில்கேட்ஸ் மற்றும் அவரது நண்பரான பால் ஆலனுடன் இணைந்து ஆல்புகர்க் நகரின் மிகப்பெரிய அடுக்கு மாடிக் கட்டிடத்தின் எட்டாவது மாடியில் ஒரு அறையில் மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனத்தை துவங்கினார். இவருடைய இத்தொலைநோக்கு சிந்தனைதான் பிற்காலத்தில் இவருடைய அபார வெற்றிகளுக்கு வழிவகுத்தது எனலாம்.
📺1981ஆம் ஆண்டில் IBM கணினிகளுக்கான MS-DOS என்ற இயங்குதளத்தை (Operating System) அறிமுகம் செய்தார். அதன் சிறப்பை எடுத்துக்கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS-DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார். இதன் விளைவாக 80-களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின.
📺அதன்பின் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் புதிய புதிய மென்பொருட்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. IBM கணினிகளுக்கு போட்டியாக மவுஸ் (Mouse) கொண்டு வேலை செய்யும் ஆப்பிள் கணினிகள் அறிமுகமானது. அப்போது உலக மக்கள் அனைவரது பார்வையும் ஆப்பிள் பக்கம் திரும்பியது. அந்த நேரத்தில் பில்கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்ற இயங்குதளத்தை (OS) அறிமுகம் செய்தார். இம்முயற்சி மாபெரும் வெற்றியை கண்டது.
📺மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய மெலிண்டா பிரெஞ்ச் என்ற பெண்ணை பில்கேட்ஸ் ஜனவரி 1, 1994ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெனிபர் காதரின், போஃப் அடேல் என்று இரு மகள்களும், ரோரி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
📺90-களின் தொடக்கத்தில் இணையதளம் மிகவும் பிரபலமாகத் தொடங்கியிருந்தது. இணையத்தில் உலா வர உதவும் 'நெட்கேப்' (net cafe) என்ற மென்பொருளை தயாரித்து விற்பனை செய்தார், மாக் ஆண்டர்சன் என்பவர். பில்கேட்ஸ் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார். ஆனால், மாக் ஆண்டர்சன் அதை விற்கவோ மைக்ரோசாஃப்டுடன் இணையவோ முன்வரவில்லை. இதன் காரணமாக, இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற இணையச் செயலியை உருவாக்கினார். இது நெட்கேப்-க்கு இணையாக இருந்தது. பில்கேட்ஸ் இதனை புதிய கணினிகளுடன் இலவசமாக வினியோகம் செய்தார்.
📺அதனால் நெட்கேப்-ன் இணைய ஆதிக்கம் பாதிக்கப்பட்டது. இதுபோன்ற விற்பனை தந்திரம் சரியானதல்ல என்று மைக்ரோசாஃப்ட்டின் மீது பல அவதூறுகள் வந்தபோதும் பில்கேட்ஸ் அசரவில்லை.
📺இன்றைய உலகில் சிறு அலுவலகங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்திலும் மைக்ரோசாஃப்ட்டின் மென்பொருள் இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. கணினி இயங்குத்தளங்களை (Operating system) பொறுத்தவரையிலும் 85�

கருத்துகள்
கருத்துரையிடுக