எஸ்.எஸ்.விஸ்வனாத தாஸ் (S.S.VISWANATHA DOSS)
பெயர் : எஸ்.எஸ்.விஸ்வனாத தாஸ்
பிறப்பு : 16-06-1886
இறப்பு : 01-01-1941
பெற்றோர் : சுப்ரமணிய பண்டிதர்,ஞானாம்பாள்
இடம் : சிவகாசி, தமிழ்நாடு
வகித்த பதவி : நடிகர், ஆசிரியர், சுதந்திர போராட்ட வீரர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
எஸ்.எஸ்.விஸ்வனாத தாஸ், 16 ஜூன் 1886 ஆம் ஆண்டு சிவகாசியில் பிறந்தார். இவர், நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை வளர்த்தவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர். இவர் நாடக நடிகர், தேசபக்தர் ஆவார். இவருடைய இளமைக் காலத்திலேயே இவருக்கு நாட்டுப் பற்றும், தேசிய உணர்வும் ஏற்பட்டு இந்த நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று உணர்வு ஏற்பட்டது.
இவர் விரும்பி ஏற்றுக் கொண்ட தொழில் நாடக நடிப்பு. தனது தொழில் துறையிலேயே மக்களுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு சுதந்திர தாகத்தை உருவாக்க வேண்டுமென்று இவர் முடிவு செய்து கொண்டார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் ஓர் நல்ல நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தார். இவருடைய நாடகங்களில் எல்லாம் தேச உணர்வுகளையும் தூண்டும் வகையில் எழுதுவார்.

கருத்துகள்
கருத்துரையிடுக