ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனைக்கு நடவடிக்கை: வேளாண் அமைச்சர்

 



ரேஷன் கடைகளில் பனை பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:


வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கப்படும்.


உள்ளூர் விவசாய தொழில்நுட்பம், இயந்திரங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கப்படும்.


விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.


ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு; இதன்மூலம் கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் விலையாக பெறுவர்.


விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021