ஜெயமோகன் (JEYAMOHAN)




பெயர் : ஜெயமோகன்

பிறப்பு : 22-04-1962

பெற்றோர் : எஸ்.பாகுலேயன் பிள்ளை,

இடம் : திருவரம்பு, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு

புத்தகங்கள் : ரப்பர், விஷ்ணுபுரம் (கவிதா பதிப்பகம்), பின் தொடரும் நிழலின் குரல் (தமிழினி பதிப்பகம்), பனிமனிதன் - சிறுவர் புதினம், கன்னியாகுமரி, கொற்றவை (புதினம்) (தமிழினி பதிப்பகம்), காடு

ஏழாம் உலகம், அனல்காற்று, இரவு, உலோகம், கன்னிநிலம், வெள்ளையானை

வகித்த பதவி : புதின, சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர்

விருதுகள் : சமஸ்கிருதி சம்மான் விருது, பாவலர் விருது



வரலாறு:-வாழ்க்கை வரலாறு


கஸ்தூரி ஜெயமோகன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும்.


பிறப்பு


ஜெயமோகன் 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி மலையாள நாயர் குடும்பத்தில் பிறந்தார். ஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. ஜெயமோகன், சிறு வயதில் பத்மநாபபுரத்திலும் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும், பின்னர், முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் பதினொன்று வகுப்பு வரை அருமனை நெடியசாலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1978 ல் பள்ளிப்படிப்பு முடித்து, முழுக்காட்டில் இருந்தபொழுது மலையாளப் புதினங்களுக்கு அறிமுகம் ஆனார். பின்னர் 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். ஆனால் 1982 இல் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவருடைய ‘கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த கொல்லிப்பாவை இதழில் வெளியாயிற்று. 1987 ல் கணையாழியில் நதி அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். 1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். தாகம் என்னும் தலைப்பில் தமிழ் புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டுள்ளது. விஷ்ணுபுரம் விருது தமிழின் முக்கியமான விருதாகக் கருதப்படுகிறது. அவரது புகழ்மிக்க நாவலான விஷ்ணுபுரம் பெயரால் அமைந்தது இவ்விருது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021