கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் பதிவிறக்கம் செய்திட மிக எளிய நடைமுறை..
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் (கொரோனா அல்லது கோவாக்சின் எதுவாக இருந்தாலும்) கீழ்க்கண்ட பதிவில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி தாங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான அரசு சான்றிதழை உங்களது மொபைலில் நீங்களே டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
*கொரோனா தடுப்பூசி💉 (CoWin) வாட்சப் எண் :*
*9013151515*
*என்ற எண்ணை தங்கள் அலைப்பேசி தொடர்பில் சேர்க்கவும்.*
*பின்னர் தடுப்பூசி செலுத்தும் போது நீங்கள் கொடுத்த உங்களுடைய அலைப்பேசி வாட்சப் எண் மூலம் தடுப்பூசி வாட்சப் எண்ணிற்கு (9013151515)*
*"Download Certificate" என்று செய்தி தகவல் அனுப்பவும்.*
*(தடுப்பூசி போடும்போது கொடுக்கப்பட்ட எண்ணும், வாட்சப் எண்ணும் ஒரே எண்ணாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரே எண்ணாக இல்லையெனில் தங்களின் வாட்சப் எண்ணில் யாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அவரின் தடுப்பூசி செலுத்திய சான்றே வரும்.)*
*பின்னர் உங்கள் கைபேசிக்கு வரும் OTP எண்ணைப் பதிவிடவும்.*
*30 வினாடிகளுக்குள் உங்கள் பெயர் அலைப்பேசி வாட்சப் திரையில் வரும். அதன் பின் எண் 1 ஐ பதிவிடவும்.*
*இப்போது உங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று வாட்சப்பில் pdf தகவலாக வரும்.*
*பின் அதை பதிவிறக்கி, பயன்படுத்தலாம்.*

கருத்துகள்
கருத்துரையிடுக