பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அடுத்த அதிரடி!வருகிறது முக்கிய மாற்றம்..போலி ஆவணப்பதிவுக்கு செக்
சென்னை போலி ஆவண பதிவுகளை தடுக்கும் நோக்கில் ஆவணங்களை எழுதி கொடுப்பவர் மற்றும் எழுதி பெறுபவர் புகைப்படம், இடது பெருவிரல் ரேகையினை பெறுவது கட்டாயமக்கப்பட்டது. ஆவணத்தை எழுதி கொடுத்தவரை அடையாளம் காட்டும் சாட்சிய நபரின் பெயர், தந்தை பெயர், முகவரி ஆகிய கூடுதல் விவரங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பத்திர எழுத்தர்கள் அல்லது, பத்திரம் எழுதும் வழக்கறிஞர்கள் புகைப்படம் இனி கட்டாயம் இடம் பெற வேண்டும். அவர்களின் உரிமம் எண், கையொப்பமும் இருக்க வேண்டும். அதை எழுதி வாங்குபவர்களின் புகைப்படமும் கடடாயம் இடம் பெற வேண்டும் எனறு ஐஜி சிவன் அருள் கூறியுள்ளார். இதன் மூலம் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்வது தடுக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள், பத்திரபதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஒரு சொத்து பதிவு செய்யப்படும் போது, அந்த பகுதிகளில் உள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் தான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் பத்திரப்பதிவுக்கு சந்தை மதிப்பு கவனத்தில் கொள்ளப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பதிவு துறை அனுமதி வழங்குகிறது.
உயர் மதிப்பு
இதனால் பல சர்பதிவாளர் அலுவலகங்களில் உயர் மதிப்பை வைத்து தான் பத்திரப்பதிவு செய்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவது தொடர்கதையானது. இந்த நிலையில தற்போது வழிகாட்டி மதிப்பு மட்டுமே பின்பற்றப்பட வேண்டும். உயர் மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டார்,
அடையாள அட்டை
இந்நிலையில் போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில் பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர், பதிவு அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "போலி ஆவண பதிவுகளை தடுக்கும் நோக்கில் ஆவணங்களை எழுதி கொடுப்பவர் மற்றும் எழுதி பெறுபவர் புகைப்படம், இடது பெருவிரல் ரேகையினை பெறுவது கட்டாயமக்கப்பட்டது. ஆவணத்தை எழுதி கொடுத்தவரை அடையாளம் காட்டும் சாட்சிய நபரின் பெயர், தந்தை பெயர், முகவரி ஆகிய கூடுதல் விவரங்களை பதிவது சட்டம் விதியின் படி ஆவண மேலெழுத்துக்களில் தெளிவாக எழுதப்பட வேண்டும் எனவும், அந்த சாட்சி நபரின் அடையாள அட்டை, ஒளிவருடல் செய்யப்பட வேண்டும்.
வாரிசுரிமை சான்று
பதிவுத்துறை சட்டத்தில் திருத்தம் செய்த பின்பும் ஆள் மாறாட்டம் மூலம் ஆவண பதிவு, ஒரே சொத்தினை இரு நபர்களுக்கு எழுதி கொடுத்தல், போலியாக முன் ஆவணம், பட்டா, வாரிசுரிமை சான்று ஆகியவற்றை தயாரித்து ஆவணம் எழுதி தருதல், ஒரு சொத்தானது வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில், அதை மறைத்து சொத்தை எழுதி தருதல், உரிமையியல் நீதிமன்றத்தால் சொத்தானது வேறு ஒரு வருக்கு பாத்தியப்பட்டது என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தவறான நபர் எழுதி தருதல், மற்ற வாரிசுகளை மறைத்து விட்டு ஓரிரு வாரிசுக்கு மட்டும் முழு சொத்தையும் எழுதி தருதல் போன்ற தவறுகள் இன்னும் நடக்கின்றன.
குற்றவியல் நடவடிக்கை
போலியான ஆவணங்களிலும் ஆவணத்தை தயாரித்தவர் என்ற இடத்தில் ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞர் கையொப்பம் இருந்தாலும் அவை போலியாக இடப்பட்டுள்ள விவரம் என நிறைய விசாரணையில் தெரிய வருகின்றது. இதன் மூலம் ஒரு ஆவணத்தை போலி ஆவணம் என முடிவு செய்யும் போது அதனை எழுதி தந்தவர் யார் என்ற விவரத்தை சரியாக அறிய முடியும். மேலும், எழுதி தந்தவருக்கு இந்த போலி ஆவணம் தயாரிப்பில் ஏதாவது தொடர்பு இருப்பின் அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள இயலும்.ஆகவே, இதனை செயல்படுத்தும் பொருட்டு கீழ்க்கண்டவாறு நடைமுறை வகுத்து உத்தரவிடப்படுகிறது.


கருத்துகள்
கருத்துரையிடுக