சேகுவாரா

 


பெயர் : சேகுவாரா

பிறப்பு : 14-06-1928

பெற்றோர் : ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிலியா டெ ல செர்னா

இடம் : அர்ஜென்டீனா

வகித்த பதவி : புரட்சியாளர்



வரலாறு:-சேகுவாரா !!

👉 உலகம் முழுக்க சில பரிச்சயமான உருவ அமைப்புகள் பல பிரபலமாகும், அது ஏன்? எதற்கு? எப்படி? என்று நம்மால் வரையறுக்க முடியாது.


👉 அப்படியான ஒரு உருவம்தான், முக சவரம் செய்யப்படாமல் சிலுப்பிய தலையோடு, சிகார் சகிதமாக, கம்பீரமான ஆளுமையாக, டி-சர்டில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் செருப்பு வரை ஒரு உருவம் பிரபலம் என்றால் அது சேகுவாரா தான்.


👉 கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன். சேகுவாரா புரியாதவர்களுக்கு புதிர். புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்.


சேகுவாரா யார்?


👉 ஏழைகளை அன்போடு அரவணைப்பவர்.


👉 ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், அரசியல்வாதி.


👉 மேலும், கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர்.


👉 சேகுவாரா என்றால் விடுதலை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்பதாகும்.


👉 சேகுவாரா என்கிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது. இந்த தேசத்தின் பிள்ளை என ஒரு தேசத்திற்குள் குறுக்கிவிட முடியாத வாழ்க்கை வாழ்ந்த போராளி ஆவார்.


👉 வெனிசுலா, கொலம்பியா, பிரேசில், கியூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போர் முறைகளின் பின்னே சேகுவாரா நின்று இருந்தார்.


👉 அடிப்படையில் மருத்துவரான இவர் ஆஸ்துமா நோயாளியாகவும் இருந்தார். ஆனால், மருத்துவம் பார்த்து நோய்களை தீர்ப்பதை விட சமூகத்தின் அழுக்குகளை தீர்க்க வேண்டும் என்கிற உறுதி அவரிடம் இருந்தது.


👉 அதற்கு முக்கியமான காரணம் தன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுக்க சுற்றியதுதான். அதோடு கார்ல் மார்க்சையும், லெனினையும் உள்வாங்கி படித்த அவர் ஏழைகளும், பாட்டாளிகளும் படும் துன்பங்களை அறிந்தபோதுதான் போராளியானார்.


சேகுவாராவின் இளமைப்பருவம்..!!


👉 சேகுவாரா 1928ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 14ஆம் தேதி அர்ஜென்டீனாவில் பிறந்தார். ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் மற்றும் சிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவராக பிறந்தார்.


👉 அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து 'ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா' என பெயர் சூட்டினர்.


👉 அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. சேவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம்.


👉 இவர் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்கு கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தில் ஆதரவாளராக இருந்தார். இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.


ஆஸ்துமா நோய் :


👉 'சே'வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராட வைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா இவரை இறுகப்பற்றியது. வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்துமா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார்.


👉 இவர் ஒரு சிறந்த 'ரக்பி' விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை 'பூசெர்' என்னும் பட்டப்பெயர் இட்டு அழைத்தனர்.


👉 தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12வது வயதில் உள்ள10ர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்களின் மீது இவருக்கு சிறந்த ஆர்வம் இருந்தது.


👉 குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. இவற்றுள் மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்கு சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் இவர் விரும்பி வாசித்தார். வசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு இவரிடம் சுழன்றுகொண்டு இருந்ததால், தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கி, பின் பகுத்து பார்க்கும் தன்மையும் இவரிடம் இருந்தது. 


சேகுவாராவின் மருத்துவ படிப்பு!!


👉 சேகுவாரா, 1948ஆம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்காக புவனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், 1951ஆம் ஆண்டு படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து, மோட்டார் ஈருருளியில் தென் அமெரிக்கா முழுதும் பயணம் செய்தார்.


👉 அப்போது தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்திருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்கு தங்களால் ஏதாவது மருந்து கண்டுபிடிக்க முடியுமா? என்ற தேடலுமே அந்த பயணத்திற்கான ஆரம்பமாக இருந்தது.


👉 பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வதுதான் இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது.


👉 தொழுநோயாளிகளின் தங்குமிடங்களை தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கைப்போட்டு சாப்பிட்டு, உறங்கி, கால் பந்தாடிய 'சே'வின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்களை ஏற்படுத்தியது. தொழு நோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது.


👉 இப்பயணத்தின்போது அவர் எடுத்த குறிப்புகளை பயன்படுத்தி 'மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்' (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாக தேர்வு செய்யப்பட்டது. பின்னர், 2004ல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.


👉 சேகுவாராவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப்போட்ட பயணம் இது. இதுவரை இவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என இவரது உலகம் உல்லாசமாக இருந்தது. ஆனால், இந்த பயணம் அவருக்கு பல படிப்பினைகளை கற்றுத்தந்தது.


👉 தென் அமெரிக்க கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு, வர்க்க வேறுபாடுகளுக்கு காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார்.


சேகுவாராவின் பயணங்கள்..!!


👉 லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் வாஷிங்டனும், அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரணமாக இருப்பதை கண்டறிந்தார்.


👉 இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்சியம் (Marxism) அவர் சிந்தனையில் தோன்றியது. மார்க்சியம் என்பது கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் ஆய்வுகள், எழுத்துக்கள் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் உலகப்பார்வை ஆகும்.


👉 இறுதியாக 1952ஆம் ஆண்டு, ஜூலை மாதம் இந்த பயணம் முடிவுக்கு வந்தபோது, 'சே' முழுவதுமாக மாறியிருந்தார். இலத்தீன் அமெரிக்காவை தனித்தனி நாடுகளாக பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார்.


👉 அதன்பின் அர்ஜென்டீனாவுக்கு திரும்பிய சேகுவாரா தனது படிப்பை முடித்து 1953ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளமோ பட்டம் பெற்றார்.


👉 தனது மருத்துவப் படிப்பை முடித்த சேகுவாரா 1953ஆம் ஆண்டு ஜூலையில் மீண்டும் பயணமொன்றை தொடங்கினார். இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, காஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்கு சென்றார்.


👉 அதே ஆண்டு டிசம்பரில் சேகுவாரா குவாதமாலாவுக்கு சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட குடியரசுத் தலைவர், நிலச் சீர்திருத்தங்களின் மூலமும், பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்.


👉 உண்மையான புரட்சியாளனாக ஆவதற்கு தேவையான அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் சேகுவாரா, குவாதமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார். ஏற்கெனவே அவருக்குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவாதமாலாவின் அரசியலை சூழல் அதிகப்படுத்தியது.


👉 குவாதமாலா நகரில், ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் நட்பு இவருக்கு கிடைத்தது. பிற்காலத்தில் இவரையே சே திருமணம் செய்து கொண்டார்.


ஹில்டா கடேயா அக்கொஸ்தா :


👉 ஹில்டா கடேயா அக்கொஸ்தா, பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளர் ஆவார். மேலும், இவர் இடதுசாரி சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் இவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன.


👉 இவர் பல உயரதிகாரிகளை சேகுவாராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்களும், கியூபாவை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்தவர்களின் தொடர்புகளும் சேகுவாராவுக்கு கிடைத்தது. அச்சமயத்தில்தான் 'சே' என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021