நம்மை பளப்பளக்க வைக்கும் பப்பாளி




பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும். 



பப்பாளிப் பழ பேக்கை முகத்தில் அடிக்கடி போட்டுக் கொண்டால், முகம் நல்ல நிறமாக இருக்கும். இதற்கு காரணம், முகத்தின் மேற் பகுதியில் அதிக அளவு மெலனின் சேர்வதை, பப்பாளி தடுத்து விடுகிறது.



பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கி அதில் சிறிது முல்தானி மட்டியை கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுதண்ணீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.



பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து அரைத்துக்கொள்ளவும். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், வெகு சீக்கிரமே முகம் மென்மையானதாக மாறி விடும.



சோற்றுக்கற்றாழை இலை ஜெல்லுடன் பப்பாளி கூழை கலந்து கொள்ளவும். இதை கழுத்து மற்றும் முகத்தில் பூசி நன்றாக தேய்க்கவும், பின் காய்ந்ததும் தண்ணீரில் கழுவும். வாரம் இரண்டு முரை இப்படி செய்தால் கருப்பு புள்ளிகள் மறையும்.



பப்பாளி கூழ். கஸ்தூரி மஞ்சள் தூள், விளக்கெண்ணை ஆகிய மூன்றையும் கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் பாதங்கள் வெடிப்புகள் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021